அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு இருங்களூர், வடக்கு தெருவை சேர்ந்த ரோக்குராஜ் 68/20 த.பெ அந்தோணிசாமி என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இடப்பிரச்சனை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஜேசுராஜ் 61/25 என்பவரின் தந்தை ஆரோக்கியசாமி என்பவரை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சமயபுரம் காவல்நிலைய குற்ற எண். 777/2005. U/s 302 IPC-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவ்வழக்கில் ரோக்குராஜிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 2018-ம் வருடம் தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி கொலைக்கு பழி வாங்கும் விதமாக, இறந்துபோன ஆரோக்கியசாமி என்பவரின் மகன் சேசுராஜ் 61/25 S/O ஆரோக்கியசாமி, பேரன் பிரின்ஸ் பெர்ணான்டஸ் 28/25 S/O ஜேசுராஜ், நடு இருங்களூர் மற்றும் மருமகள் ஞானசுந்தரி 28/25 க.பெ ஜேசுராஜ் ஆகியோர் சேர்ந்து ரோக்குராஜ் 68/20 த.பெ அந்தோணிசாமி, மற்றும் அவரது மகன் ஜான் டேவிட் 33/20 ஆகிய இருவரையும் கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன ரோக்குராஜ் மனைவி இருதயமேரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரிகள் மீது சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 831/20, U/s 34, 341, 302 IPC-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (21.06.2025) இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் அவர்கள் மேற்படி வழக்கின் எதிரி1. பிரின்ஸ் பெர்ணான்டஸ் 28/25 S/O ஜேசுராஜ், எதிரி2, ஜேசுராஜ் 61/25 S/O ஆரோக்கியசாமி, ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி-3 ஞானசுந்தரி 28/25 க.பெ ஜேசுராஜ் என்பவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன் மற்றும் சமயபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் விக்னேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.