டாக்டர் ராமதாஸின் திடீர் சென்னை பயணம்! ஜூன் 10-ல் முக்கிய அறிவிப்பு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி மோதல் நீடிக்கும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சென்னை விரைந்துள்ளார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு ஜூன் 10-ஆம் தேதி செய்தியாளர்களை சந்திப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்ற அன்புமணி, வன்னியர் சங்க சொத்துக்கள் தொடர்பாக தாயாரிடம் பேசியதாக தகவல் வெளியாகின. அப்போது ராமதாஸ், அன்புமணியை சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

Latest Tamil Newsஇந்த நிலையில் இன்று திடீரென தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் டாக்டர் ராமதாஸ். அப்போது செய்தியாளர்களிடம், சென்னையில் மகள்கள் இருக்கின்றனர்: பேத்திகள், கொள்ளு பேரன்,  பேத்திகளை பார்க்க செல்கிறேன்.

2 நாட்கள் இருந்து விட்டு தைலாபுரம் வருவேன். வருகின்ற ( ஜூன் 10 ) செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.  மேலும், ஆடிட்டர் குருமூர்த்தியும் சைதை துரைசாமியும்  நீ நீண்ட கால நண்பர்கள். அவர்கள் என்னை சந்தித்து பேசினர் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ராமதாஸ், அன்புமணி இடையேயான சமாதான முயற்சிகளை மகள்கள் ஸ்ரீகாந்தி, கவிதா இருவரும் தான் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னைக்கு ராமதாஸ் பயணம் மேற்கொண்டிருப்பதும் இந்த சமாதான முயற்சிகளின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர் பாமக வட்டாரங்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.