முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி!
சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற முழக்கத்தை தனது இறுதி மூச்சு வரை எழுப்பி வந்த மூத்த கல்வியாளர் முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்கள் தனது 95வது வயதில் 03.02.2026 அன்று இரவு 11.54 மணிக்கு நம்மிடமிருந்து விடை பெற்றார்.

தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைத்துவிட கூறிச் சென்றவரின் விருப்பப்படி சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மாணவர்கள் ஆராய்ச்சிக்காக 04.02.2026 அன்று காலை சுமார் 9 மணியளவில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.
சமச்சீர்க் கல்விக் குழுவில், பல்வேறு பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டம்தான் தனித்துவத்துடன் உயர்ந்து நிற்கிறது என்று உறுதிப்பட தெரிவித்தார்.
கல்வி உரிமையைக் காக்கும் பெரும் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கமாக உழைக்கின்ற மக்கள் ஓரணியில் திரள்வதே முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு செலுத்தும் மெய்யான அஞ்சலி.
முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை








Comments are closed, but trackbacks and pingbacks are open.