காவல் நிலையத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின் திராவிட அரசு – டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தன் துறையின் கட்டுபாட்டில் உள்ள காவல் நிலையத்தையே காப்பாற்ற முடியாத  ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொண்டு தனது  பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்  அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடும் குற்றச்சாட்டு….

இன்றைக்கு கமிஷன், கரப்சன், கலெக்ஷன் என்று ஸ்டாலின் திமுக ஆட்சி ஊழலிலும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டிலும் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது, என்று எடப்பாடியார் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வருகிறார். ஆனால் தான் இன்றைக்கு கண்ணை மூடிக்கொண்டு தமிழகத்தில் ஏதும் நடைபெறவில்லை அமைதி பூங்காவாக உள்ளது என்று தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். சட்டமன்ற  மானிய கோரிக்கையில் எடப்பாடியார் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்கேடை தோலுரித்துக் காட்டினார் , அதன் படி சீர் செய்து இருந்தால் இந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு  மோசமாக நடந்து இருக்காது.

Sri Kumaran Mini HAll Trichy

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் கையில் உள்ள உள்துறை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக சட்ட ஒழுங்கு என்ன விலை ? என்று கேட்கும் அளவில் உள்ளது, தமிழகத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் குற்றங்களை தடுக்க முடியவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் 18 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று போக்ஸோ  வழக்கு போடப்பட்டது. தற்போது ஜனவரி 1 முதல் ஜூன் 12 வரை பெண்களுக்கு எதிரான 878 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7000 படுகொலை நடைபெற்று உள்ளது.

Flats in Trichy for Sale

அதேபோன்று 15,280 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தும் குற்றங்களும் குறையவில்லை, கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு போதைப்பொருள் வழக்குகள் 40 சகவீதம் அதிகரித்துவிட்டது. மேலும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்தின் நடைபெறாத வகையில் கள்ளச் சாரயம் சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ 100 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் வயதான தம்பதிகளை குறி வைத்து படுகொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இதில் ஏறத்தாழ 12 குற்ற சம்பவங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்குகளில் சில வழக்குகளை அவசரக்கதியில் வழக்கை முடிக்க வேண்டும் என்று   போலியான  குற்றவாளிகளையும் பிடித்துள்ளனர். தற்போது உண்மை குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின் இந்த விவகாரம் வெளியே வந்தது.

இதற்கெல்லாம் மேலாக இன்றைக்கு திருமங்கலம் தொகுதியில் உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூக விரோதிகள் சூரையாடி, அங்குள்ள காவலரையும் தாக்கியும், காவல் நிலையத்தை பூட்டி விட்டு சென்றனர். தமிழகத்தில் இது போன்ற சம்பவம் எங்கே நடைபெறவில்லை. இந்த சம்பவத்தை நேரில் பார்க்க சென்ற சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு அனுமதியை மறுத்து அவரை கைது செய்தனர்.

எடப்பாடியார் உதிர்த்த 'நான் உருவாக்கிய ஆட்சி'...! மறதியா, மமதையா,  மகிழ்ச்சியா? பட்டையை கிளப்பும் பட்டிமன்றம் | Edappadi Palaniasamy Speech |  Asianet News Tamilஇதற்கு கூட எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார், அதன் பின்பு தமிழகம் முழுவதும் இதற்கு கடுமையான கண்டன குரல் எழுந்ததுஆனால் இன்றைக்கு உள்துறை கையில் வைத்துள்ள ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? இனியும் ஸ்டாலின் எந்தப் பொய் புளுகு மூட்டை பதிலாக சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 56 துறைகளில் நிர்வாக சீர்கேடு உள்ளது, இதில் முதன்மையாக இன்றைக்கு உள்துறையாக உள்ளது, இன்றைக்கு தனது துறையை கூட காப்பாற்ற முடியாத  ஸ்டாலின்  தோல்வியை ஒப்புக்கொண்டு தனது பதவியை உடனியாக ராஜினாமா செய்ய வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.