அங்குசம் பார்வையில் ‘திரெளபதி – 2’
தயாரிப்பு : நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழா சக்கரவர்த்தி. டைரக்ஷன் : மோகன் ஜி. ஆர்ட்டிஸ்ட் : ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி [எ] நட்ராஜ், வேலராமமூர்த்தி, தேவியானி ஷர்மா, திவி வைத்தியநாதன். ஒளிப்பதிவு : பிலிப் கே.சுந்தர், இசை : ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங் : தேவராஜ். ஆர்ட் டைரக்டர் : எஸ்.கமல், ஸ்டண்ட் : ஆக்ஷன் சந்தோஷ், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
இந்தப் பட ரிலீஸ் தினத்தன்று [ ஜன.23] தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தலையில்லாத கருப்புச் சிலை, கையில் இருப்பது என்னவென்று தெரியாத அளவுக்கு அந்த விளம்பரம் இருந்தது. படம் பார்த்த பின்பு தான் நமக்குப் புரிந்தது… பாபர் மசூதி இடிப்பு—ராமர் கோவில் கட்டு’ என்ற கட்டுக்கதையைத் தான் தனது அறிவார்ந்த பார்வையில் இருந்து டைரக்டர் மோகன் ஜி. இந்த ‘திரெளபதி-2’வைப் படைத்திருக்கிறார் என்று. இந்த கட்டுக்கதைக்கு அலாவுதீன் கில்ஜி படையெடுப்பு, இஸ்லாம் மன்னர்களின் போதைப் பழக்கம், பொம்பள வெறி, மதமாற்ற வெறி இதையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு , இவற்றையெல்லாம்விட இன்னும் உச்சபட்ச கொடூரமாக மனித மாமிசம் சாப்பிடும் சுல்தான் மன்னன் என கொடூரத்தின் உச்சிக்கே போய் சாமியாடியிருக்கிறார் இந்துத்வா மோகன் ஜி.
“ஆயிரம் வருசமா நாம இங்க இருக்கோம். ஆனா அறுநூறு வருசத்துக்கு முன்னால வந்தவனுக்கு இஸ்லாமியர்கள் நலவாரியாமாம், வக்பு வாரியாமாம்” படத்தின் முதல் காட்சியிலேயே நமக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது இது 100%% சுத்தமான விஷப்படம் என்று.
இதற்கு மேல் இந்த ‘திரெளபதி’யை நாம் விமர்சிக்க விரும்பவில்லை. மக்களே நிராகரிப்பார்கள்.
அங்குசம் பார்வையில் ‘திரெளபதி – 2’ ?/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.