துல்கர் சல்மானின் 41-ஆவது படம் ஆரம்பம்!
தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியின் ‘எஸ்.எல்.வி. சினிமாஸ்’-ன் 10-ஆவது தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் 41—ஆவது படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் நேற்று [ ஆக.04] ஹைதரபாத்தில் ஆரம்பமானது. தெலுங்கு சினிமாவின் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி க்ளாப் அடிக்க, பிரபல டைரக்டர் புச்சிபாபு சனா கேமராவை ஆன் பண்ணி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். குன்னம் சந்தீப், ரம்யா குன்னம், நானி ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தின் ஸ்கிரிப்டை, ஒப்படைத்ததும் முதல் காட்சிக்கு ஆக்ஷன் சொன்னார் படத்தின் டைரக்டர் ரவி நெலகுடிடி. ‘தசரா’ & ‘தி பாரடைஸ்’ படங்களின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சமகால காதல் கதையை துல்கர் சல்மானின் நடிப்புத் திறமைக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ரவி நெலகுடிடி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் துல்கருக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யூவை கணக்கில் கொண்டுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு : அனய் ஓம்.கோஸ்வாமி, இசை : ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
— மதுரை மாறன்