வைகோவின் தளபதி யார் ? துரைவைகோ Vs மல்லை சத்யா நடப்பது என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதிமுக பதாகையில் மல்லை சத்யா  – துரைவைகோ படம்  மதிமுகவில் நடப்பது என்ன?

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வழக்கறிஞர் மணலூர் இரா.சத்தியகுமாரன் சமூக ஊடகப் பதிவில், பெரியார், அண்ணா, வைகோ வரிசையில் மல்லை சத்யாவின் படம் இருப்பது கண்டு கொந்தளிப்புடன் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்தப் பதிவின் முழுவடிவம்….

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

“மதிமுக தொடங்கப்பட்டு பொதுச்செயலாளராக தன்மானத்தலைவர் என் உயிர் தலைவர் ஐயா வைகோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாள் முதல் தொண்டர்களின் முழு ஒத்துழைப்போடு மக்களுக்கான போராட்டம் சட்ட போராட்டம் நாடாளுமன்ற போராட்டம் நடத்தி இமாலய வெற்றி பெற்று இந்தியாவில் தலைசிறந்த நேர்மையான ஒழுக்கமான மாபெரும் தலைவராக தலைநிமிர்ந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

வைகோ - துரை வைகோ
வைகோ – துரை வைகோ

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கொரோனா காலத்திற்கு முன்பே பச்சை துரோகிகள் இயக்கத்தை நிர்மூலமாக்க ஈட்டிய செயல் திட்டத்தை நன்கு அறிந்த பிறகு தமிழ் ஈழ மக்களுக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வு என்னும் அடிப்படையில் மாசற்ற தலைவர் ஐயா வைகோ அவர்களுக்காக மட்டுமே இயக்கத்திற்கு வந்தவர்கள் தொலைநோக்கு பார்வையோடு ஒன்று சேர்ந்து மதிமுகவை பாதுகாத்து வழிநடத்தவும்,இயக்க தோழர்களை வெற்றி பெறச்செய்யவும் தலைவர் வைகோவின் மகன்

கலிங்கப்பட்டி துரை வையாபுரி மட்டுமே தீர்வு என்பதை முடிவெடுத்து மதிப்பிற்குரிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக வாக்குப்பதிவில் கலந்து கொண்ட 106 க்கு 104  பேர் ஆதரவு தெரிவித்தும், இயக்கத்தின் இதயம் கழக பொதுக்குழுவில் ஏகோபித்த ஆதரவோடு தலைமை கழக செயலாளராக பதவியில் அமர்த்தி அதன் பின்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிகளை பெற்று சட்டமன்ற தேர்தலில் ஆறில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொடுத்த ஒரே ஒரு இடத்தை பெற்று முதன்மை செயலாளரை தீப்பெட்டி சின்னத்தில் வேட்பாளராக நிறுத்தி  சிங்கத்தின் குகைக்குள்ளேயே.!!! நின்று சூழ்ச்சிகளை முறியடித்த அண்ணாவின் மறு வடிவம் என் உயிர் அண்ணன் மாண்புமிகு துரை வைகோவின் இராஜதந்திரத்தால் தனித்துவம் வாய்ந்த தனித்தன்மையோடு அபார வெற்றியும் பெற்றோம்.

மதிமுக அத்தியாயத்தில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா தலைவர் வைகோஇனியவர் துரை வைகோ என்னும் தலைவர்களின் வரிசை எட்டு திக்கும் தெரிந்த பிறகும்கூட இது போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பதிவிட்டு கட்சிக்கு புற்றுநோயாக இருக்கும் Earnest Paul போன்ற நம்பிக்கை துரோகிகளே…!!! உனை போன்றோர் பதிவிடுவது அநாகரிகத்தின் உச்சம்.

வைகோ - மல்லை சத்யா
வைகோ – மல்லை சத்யா

32 ஆண்டுகள் அல்ல 300 ஆண்டுகள் உழைத்து இருந்தாலும் பெரியார் அண்ணா வைகோ துரை வைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதனை ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கலாம்.மறுப்பவர்கள் உடனே வெளியேறி செல்லலாம். இயக்கத்தில் இருந்து கொண்டே சில வருடங்களாக பத்தினி வேஷம் போட்டிருப்பதை கலைந்து கட்சியிலிருந்து வெளியேறுவது தங்களை போன்றோர்களின் பச்சை துரோகிகளுக்கு ரொம்ப நல்லது. அதை விடுத்து மதிமுக வை  உடைத்து விடலாம் கட்சியில் பிளவு ஏற்படுத்திடலாம் தாயகத்தை நெருங்கி விடலாம் என்று நினைக்கும் துரோகிகளுக்கு சொல்வேன்.

இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து இயக்கத்தை வைத்து இன்று வரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்காத உயிரை துச்சமாக கொடுக்கக்கூடிய என்னை போன்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்ற வரை உன்னை போன்ற நயவஞ்சகர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது. கடைசி தொண்டனின் எண்ணம். இயக்க தந்தை ஐயா வைகோ

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

என் உயிர் அண்ணன் மாண்புமிகு துரை வைகோ ஆகியோரின் கட்டளையை ஏற்காத பின்பற்றாத மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக்கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு வந்த வழியே சென்றுவிடுங்கள். இது துரையோட காலம் இயக்கத்தின் அண்ணன் என் உயிர் அண்ணன் துரை வைகோவின் காலம் என்பதை எதிரிகளும் துரோகிகளும் உணருகின்ற காலம் இதோ வந்து விட்டது. தூய்மையான உள்ளம் தலைவரையும் இளம் தலைவரையும் வணங்கி மகிழ்கிறேன்” என்று முடிகின்றது.

இந்த நிலையில் மல்லைசத்யா பதிலடியாக  32 ஆண்டுகள் மதிமுகவில் உழைத்தற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர்.

எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவிற்கு காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம், ஆனால் வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க எந்த சக்தியாலும் முடியாது. நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னை சொல்லலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒரு போதும் வரக்கூடாது என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கிறேன். சமூக வலைதளங்களில் என்படம் பெயர் போட்டு பதிவிடுபவர்களுக்கு நானே பதிவு போடுகிறேன் இந்த விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

துரை வைகோ - மல்லை சத்யா
துரை வைகோ – மல்லை சத்யா

60களில் ம.பொ.சி. தமிழரசு கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணாவிடம் தமிழரசு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கருத்து தெரிவிக்கும்போது,“கொசுவுக்கு எதற்கு ஆப்ரேசன்” என்று நகைச்சுவையாகச் சொன்னார். மதிமுக என்னும் இயக்கம் திமுக என்னும் ஆலமரத்தின் நிழலில் சிறு செடியாக இருக்கிறது. துரை வைகோ அதை எப்படி மரமாக வளர்க்கப் போகிறார் என்பது விடையில்லாத வினா. மல்லை சத்யாவின் படம் பதாகையில் ஏன் இடம்பெற்றது, எதனால் இப்போது பிரச்சனை புகையத் தொடங்குகிறது என்று மதிமுக முன்னாள் பகுதி செயலாளரிடம் பேசியது, “வரும் ஜூன் மாதத்தோடு வைகோவின் மாநிலங்களவை உறுப்பினருக்கான காலம் முடிகிறது. மீண்டும் மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் திமுக தருமா? என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அப்படி கொடுத்தால், கடந்த முறையைப் போல திமுக வைகோவுக்காக தருவோம் என்ற நிலைப்பாட்டை எடுக்குமா? என்பதும் தெரியவில்லை.

பெரும்பான்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், வைகோ திமுகவிடமிருந்து மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினரைப் பெறவேண்டும். பெற்று அந்த இடத்திற்கு கட்சியின் மாநில துணைச்செயலாளர் மல்லை சத்யா நிறுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். காரணம் வைகோ தன் வாரிசை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக்கி விட்டார். மகனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் வைகோ ஜூன் மாதத்திற்குப் பிறகு நீடிக்கக்கூடாது என்பதேயாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். துரைவைகோ கட்சியில் பணியாற்றாமல் வைகோ மகன் என்ற தகுதியில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருக்கிறார்.

அதுபோலவே கட்சிக்காக 32 ஆண்டு காலம் உழைத்துக்கொண்டிருக்கும் மல்லை சத்யா மாநிலங்களவை உறுப்பினராக ஆக்க வைகோ முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். பீமநகர் மதிமுக மல்லை சத்யா படம் போட்ட பதாகையை வெளியிட்டனர். இதற்கு  வழக்கறிஞர் மணலூர் இரா.சத்தியகுமாரன் துரைவைகோவை விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மல்லை சத்யா மாநிலங்களவைக்குச் செல்லவேண்டும் என்று விரும்புவது கட்சிக்குச் செய்யும் துரோகம் என்பது கடைந்தெடுத்த கற்பனையே” என்று கூறினார்.

துரை வைகோ கன்னி பேச்சு
துரை வைகோ கன்னி பேச்சு

இதற்கிடையே திருச்சியில் மல்லை சத்யாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் 20 -ம் தேதி நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது.  சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக என்னும் இயக்கம் நிதானமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. துரைவைகோ மட்டும் இயக்கினால் போதாது, மல்லை சத்யாவையும் இணைத்துக்கொண்டு இயக்க அவருக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என்று மதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பை இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் வைகோ என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

–ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.