திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரு விழா கொண்டாட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கல்லூரி நாள் விழா, விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா ஆகிய விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவாக 14.04.2025 கல்லூரி வளாகத்தில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முனைவர் வணிகவியல் துறை தலைவர் வரவேற்புரை ஆற்ற, தலைமை உரையும் ஆண்டு அறிக்கையும் முனைவர் கா அங்கம்மாள் வாசித்தார். முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சா சந்திரசேகரன் விளையாட்டு துறை ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக முனைவர் கார் ரமேஷ் முதல்வர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜெயங்கொண்டம் அவர்களும், திருமுருகன் சிவசுப்பிரமணியம் காவல்துறை ஆய்வாளர் பூதலூர் மற்றும் சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துறையில் கல்லூரியின் நிதியாளர் திருமதி பா வசந்தி மற்றும் இணைப்பு முறையாக முனைவர் ஆகாஷ் ஆங்கிலத்துறை தலைவர் வழங்கினர். இறுதியில் கல்லூரியில் பயின்று மூன்றாம் ஆண்டு நிறைவு செய்கின்ற மாணவர் மாணவர்களுக்கு முதல் இரண்டு மூன்றாம் பரிசுகளை சிறப்பு விருந்தினர் ரமேஷ் அவர்கள் வழங்கினார். முனைவர் சுரேஷ்குமார் கணினி அறிவியல் துறை தலைவர் நன்றி உரையுடன் விழா இனிதே முடிவுற்றது. இறுதியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.