கலைஞரின் சாதனையை சமன்செய்த துரைமுருகன் ! என்ன தெரியுமா?
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் 17-ஆவது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில், தொடர்ந்து 13-வது முறையாக களமிறங்கியிருக்கிறார் திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன். தற்போது போட்டியிடுவதன் வழியே, முன்னாள் முதல்வர் கலைஞரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இதுவரை 12 சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட துரைமுருகன் 2 தோல்வியுடன் 10 முறை வெற்றிப்பெற்றிருக்கிறார்.
1977, 1980 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றிருந்தார். காட்பாடி தொகுதியில் மட்டும் 10 முறை போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்றார். இதில் 1984, 1991- ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் மட்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த வகையில், இந்திய அளவில் அதிக முறை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்த ராமையா, 11 முறை போட்டியிட்டு 10 வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேபோல, உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தான் போட்டியிட்ட 10 முறையும் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் சார்பாக அதிக முறை போட்டியிட்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டும்தான். தான் போட்டியிட்ட 13 முறையும் தோல்வியே தழுவாமல் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை இன்னும் தக்கவைத்திருக்கிறார்.
தற்பொழுது 13 -வது முறையாக காட்பாடி தொகுதியில் களமிறங்குவதன் மூலம் துரைமுருகன், 13 முறை போட்டியிட்டவர் என்ற அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார்.
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.