“அரசுக்கு கெட்ட பெயர்” கடமை தவறும் போலீஸார்…
போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இ.சலான் முறையில்தான் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை “டிஜிட்டலைஸ்ட்” செய்யப்பட்டாலும் போலீஸாரின் பேராசையால் வசூல் வேட்டை படு “ஜோர்”…
“டோக்கன்” கொடுக்கும் போலீஸார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு வாலிபர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வர, அங்கிருந்த போலீஸார் அவரது வாகனத்தை மறுக்கவே வாகனத்திலிருந்து இறங்கிய இளைஞர் தெரியாமல் நடந்து விட்டது சார் இனிமேல் குடித்துவிட்டு வண்டி ஓட்ட மாட்டேன் எனக்கெஞ்ச போலீசார் தொனியில் மிரட்டி வண்டியை பறித்துக் கொண்டுள்ளார்.

குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் ஃபைன் கட்டணம் போய் பணம் எடுத்து வா என சொல்ல அந்த இளைஞர் வீட்டுக்கு போன் செய்து கையில் இருந்த பணத்தை எடுத்து வந்து சிறிது நேரத்தில் போலீசாரிடம் கெஞ்சி கூத்தாடி இவ்வளவு தான் உள்ளது என கெஞ்ச இருந்த “3500” பணத்தைப் பெற்றுக் கொண்ட போலீஸ் சார் ஒரு டோக்கனை கையில் கொடுத்து பைக் பெரம்பலூர் நகராட்சி பைக் ஸ்டேண்டில் இருக்கு போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பினாராம்..
பணம் கொடுத்தால் பைக்..
திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை இ.சலான் முறையில் இல்லாமல் போக்குவரத்து போலீஸார் ஸ்பாட் வசூல் செய்வது தொடர்கிறது..
தமிழ்நாடு காவல்துறை டிஜிட்டலைஸ்ட் ஆன பின்னும் கட்டாய பணம் வசூல் செய்வதால் மக்களின் கோபம் அரசு மீது திரும்புவது தெரிகிறது.. திருச்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அருகே, மத்திய பேருந்து மேம்பாலங்களில் “பீக் ஹவர்ஸில்” வாகனங்களை “மடக்குவது” தேவையற்ற நெரிசலை உண்டாக்குகிறது.
முசிறி மேம்பாலம், துவாக்குடி டோல், மணப்பாறை மேம்பாலம் பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் அந்த வழியாக செல்லும் வாகனங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டும், கையடக்க நோட்டில் குறித்துக் கொண்டு தேவைப்படும் போது “டார்கெட்” பைன் போடுவது காணப்படுகிறது..
மணப்பாறையில் திரும்பும் பக்கமெல்லாம் விரட்டி விரட்டி பைன் போடும் போக்குவரத்து போலீஸார், வாகனங்களை பறிமுதல் செய்துகொள்வதும் இ.சலான் ரசீது செய்யாமல் கட்டாயமாக பணத்தை கையில் “மொத்தமாக” வாங்குவதை பார்க்க முடிகிறது..
அதனால் போக்குவரத்து பிரிவுக்கு பெரியவர் முதல் இளையோர் வரை போட்டோ போட்டி அதிகமாகி வருகிறது.
இ.சலான் போட்டால் கவர்மெண்ட்க்கு பணம் போகும் என்பதால் “ஆதாயம்” பார்ப்பதில் ஆர்வமாக உள்ளனர் போலீஸார். இவர்களால் அரசுக்குதான் அவப்பெயர் என தலையிடித்துக் கொள்கிறார்கள் பொதுஜனம்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் போக்குவரத்து காவல் அதிகாரியால் கர்ப்பிணிப் பெண் உஷா இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவம் போன்று மீண்டும் அரங்கேறிவிடக் கூடாது.
“அலர்ட்” ஆகுமா அரசு..
லாஸ்ட் டையல்
பண மழை கொட்டும் “ரைட்டர்” போஸ்ட்
திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் “ரைட்டர்” போஸ்ட் க்கு செம கிராக்கியாம். கல்லாக்கட்டும் அந்த போஸ்டிங்-ஐ யாருக்கும் விட்டுக்கொடுக்க விரும்பாத “ரைட்டர்கள்” எந்த ஸ்டேசன் போனாலும் ரைட்டர் சீட்டை குறி வைத்து சண்டை போட்டுக் கொள்கிறார்களாம்.. அதனால் அடுத்தடுத்த
“பலனா” புகார்களுக்கு மத்தியில்
பண மழை கொட்டும் “ரைட்டர்” இடத்துக்கான போட்டா போட்டி தான் காரணம் என தெரிந்து செய்வதறியாமல் நிற்கிறார்கள் மாவட்ட காவல் அதிகாரிகள்..
–அங்குசம் செய்தி பிரிவு