சம்மணங்கால் கால் போட்டுத்தான் சாப்பிடனுமா? அட இது தெரியாம போச்சே ! பாகம் – 08
அட இது தெரியாம போச்சே ! பாகம் - 08
சம்மணங்கால் கால் போட்டுத்தான் சாப்பிடனுமா? ஏன் நின்னுகிட்டு சாப்பிடக்கூடாதா? டைனிங் டேபிளில் கூட சாப்பிடக்கூடாதா? நடந்துகிட்டே சாப்பிடக்கூடாதா? இப்படி எல்லாம் சிலருக்கு கேள்விகள் இருக்கும்.
சாப்பிடும்போது கீழே தரையில் சம்மணங்கால் இட்டு உணவு உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது. மேல் உடலுக்குத் தேவையான அளவு ரத்த ஓட்டம் செல்லும். இதனால், மேல் உடல் பாகங்களின் செயல்திறன் அதிகரிக்கும். முக்கியமாக செரிமான மண்டலம் வலுப்பெற்று, செரிமானம் சீராகவும், அஜீரணக் கோளாறுகள், வயிறு பிரச்னைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.
மாறாக, கால்களைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது, போதுமான ரத்த ஓட்டம் மேல் உடலுக்குச் செல்லாமல், தேவையின்றிக் கீழ் உடலிலுள்ள கால்களுக்குச் செல்லும். இதனால் மேல் உடலின் செயல்திறன் பாதிக்கப்படும்.
உணவைக் கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்!
— பேரா சா அருள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.