எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த மாவட்டம் திருச்சி – எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் !
அதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் இன்று தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆரு.க்கு மிகவும் பிடித்த மாவட்டம் திருச்சி – எடப்பாடி தேர்தல் பிரச்சாரம் !
சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு கட்சியினரும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் வாதங்களும், தமிழகத்தில் வீசும் வெப்ப அலையோடு போட்டியிடும் அளவுக்கு அனல் தகித்துக் கிடக்கிறது.
அதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் இன்று தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவரது பிரச்சார உரையில், ”இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாயத் தோற்றத்தில் உள்ளன. இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக கூட்டணி முதன்மையாக விளங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை, பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், “சின்னத்தை முடக்க வேண்டுமென சிலர் முயற்சி செய்தனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். 3 ஆண்டு திமுக ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். 3 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரிகூட அமையவில்லை. அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த மாவட்டம் திருச்சி. காவிரி பாயும் பசுமை நிறைந்த மாவட்டம் திருச்சி.
14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் முக்கியம் என்பதாலேயே பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம். மரத்திற்கு மரம் தாவுவது போல் பாஜக, காங்கிரஸ் என்று கூட்டணி அமைத்து மத்தியில் பதவி வகித்தது திமுக. தமிழகத்தில் செல்வாக்கு இழந்த ஸ்டாலின் இந்தியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார்.
அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பலன்பெற கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தி, மாநிலத்தை சீரழித்துவிட்டது.” என்றார்.
இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார் சீனிவாசன், பரஞ்சோதி ,கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேலு,வளர்மதி, மனோகர், மாநில ஜெ. பேரவை செயலாளர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் உட்பட அதிமுகவினர் மற்றும் தோழமைக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இரா.சந்திரமோகன்.
இதையும் படிங்க :
ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டவன் – எடப்பாடி பழனிச்சாமி !