வெறும் வயித்துப் பொழப்புன்னு நெனக்கிறதே இல்ல … காத்தக் குடிச்சு தவம் பண்ற சாமியாருங்க மாதிரி !

அவனுக்கு உலகமே விழுந்து நொறுங்கிட்டு இருந்தாலும், தன்னோட குழந்தையான கலையைக் காட்சிப் படுத்தனும். அவ்வளவுதான், யார்கிட்டயாவது அதப் பத்திப் பேசனும்.

0

வெறும் வயித்துப் பொழப்புன்னு நெனக்கிறதே இல்ல … காத்தக் குடிச்சு தவம் பண்ற சாமியாருங்க மாதிரி !

மைசூருக்குப் போற வழியில சன்னப்பட்னான்னு ஒரு ஊரு, மரப்பாச்சி பொம்மைங்களுக்கு பேர் போனது, இன்னமும், ரோட்ல வரிசையா பொம்மைங்கள அடுக்கி வச்சுட்டு நடுவுல வயசான மனுஷங்க அழுக்கு வேட்டியோட உக்காந்து வியாபாரம் பண்ணுவாங்க….

https://businesstrichy.com/the-royal-mahal/

குழந்தைங்களுக்கு இப்பவெல்வாம், மரப்பாச்சி பொம்மை, நடவண்டி, பாட்டி சொல்ற கதை எல்லாமே யூட்டியூப்ல வந்துருது, பொம்மை வச்சு வெளையாடுற குழந்தைகளே அருகிட்டு வரறாங்க, இதுல மரப்பாச்சி பொம்மைங்க வேறயா?

சன்னப்பட்னா ரோட்ல உக்காந்திருக்கிற பெரியவங்களுக்கு இதெல்லாம் நல்லாத் தெரியும், ஆனாலும், முகத்துல ஒரு ஒளி இருக்கும், பொம்மை செய்றதையோ, விக்கிறதையோ அவங்க எந்த சூழ்நிலைலயும் விட்டுட்டுப் போனதில்ல…

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மனசுல ஒரு வைரம் பாஞ்ச உறுதி, வட்டிக்கு வாங்கி அதையே திரும்பத் திரும்ப செய்றது, நெலத்த வித்துட்டு எந்த ஆதாரமும் இல்லாம அந்த ரோட்ல உக்காந்திருப்பாங்க….

ஏன்னா, அத அவுங்க வெறும் வயித்துப் பொழப்புன்னு நெனக்கிறதே இல்ல, அவங்களப் பொறுத்த வரைக்கும் அது ஒரு கலை, காலம் காலமா அந்த நிலத்துல அவங்க முன்னோர்கள் வளத்தெடுத்த கலை, அவங்க கலைஞர்கள்.

ஒரு கலைஞனுக்கு என்ன இலக்கு? அவன் எத நோக்கிப் போறான்? தான் செய்யுற கலைய மக்கள் முன்னாடி வைக்கனும், மக்கள் அதப் பாக்குறானா? மதிக்கிறானா?  அங்கீகாரம் தர்றானா? அதெல்லாம் ரெண்டாம் பட்சம்…. .

அவனுக்கு உலகமே விழுந்து நொறுங்கிட்டு இருந்தாலும், தன்னோட குழந்தையான கலையைக் காட்சிப் படுத்தனும். அவ்வளவுதான், யார்கிட்டயாவது அதப் பத்திப் பேசனும்.

மரப்பாச்சி பொம்மைய எப்பிடி செய்றது, அதுல இருக்கிற சவால்கள், அதுல இருக்குற நுட்பம், இதையெல்லாம் யார்கிட்டயாவது சொல்லீட்டாப் போதும், அன்னிக்கி 1000 ரூபாய்க்கி வியாபாரம் ஆன மாதிரி.

வயிறார சாப்பிட்ட மாதிரி, காத்தக் குடிச்சு தவம் பண்ற சாமியாருங்க மாதிரிக் கலைஞன், அவன் நிகழ்த்துற கலையவே குடிச்சு, சாப்பிட்டுத் தூங்குறவன்.

சன்னப்பட்னாவுக்குப் பக்கத்துல பைரபட்னான்னு ஒரு ஊரு, அனுமாரு இதயத்தத் தொறந்து ராமனுக்குக் காட்டுவாருல்ல, அந்த மாதிரி முகம் நெறைய சிரிப்போட “அண்ணா”ன்னு அன்ப அருவியாக் கொட்றவ, ஒரு கன்னடத் தங்கச்சி, அவ கல்யாணத்துக்குப் போனப்ப, NH 4 ல இருந்து கொஞ்சம் உள்ள எறங்கி நடந்தா…….

கேப்பை வயலுங்க, பச்சைப் பசேல்னு அடர்த்தியா மரங்க, தரை தெரியாம பூத்துக் குலுங்குற ஆவாரம் பூச்செடிங்கன்னு ஒரு மலைக்கிராமத்துக்குப் போற மாதிரி புழுதில கால் தடம் அழியாமத் தங்கி இருக்குற மண்பாதை, ஆடு மாடுங்களோட பேசிக்கிட்டே அதுங்க கூடவே படுத்துத் தூங்குற வெள்ளந்தி மனுஷங்க….

சாயங்காலம் 7 மணிக்கி கோயில் வீட்ட சுத்தி இருக்குற சிமிண்ட் கட்டைல உக்காந்து ஹார்மோனியத்துக்கு உள்ள சிறைப்பட்டுக் கெடக்குற இசையக் காத்துல மெதக்க விட்டு, சாமிங்க அநீதிய அழிச்ச பழைய கதைய விடாம சொல்லிக்கிட்டே இருக்குறாங்க…

சுத்தி உக்காந்து அந்தப் பெரியவங்க கூடப் பாடுற குழந்தைங்க, இது மாதிரி ஒரு கனவு வாழ்க்கை வாழுற மனுஷங்க, டிவியையும், மொபைலையும் மட்டுமே உலகமா நெனக்கிற நம்ம நகரங்களுக்குப் பக்கத்தில இன்னும் வாழ்ந்துக்கிட்டே இருக்காங்க.

காடு கழனின்னு வேலை செய்வாங்க, ஒடம்பு படுத்தும், அடுத்த நாள் சாப்பாட்டுக்கு வீட்ல அரிசி இல்லைன்னு வீட்டம்மா காலைல சண்டை புடிச்சிருக்கும், எந்தக் கவலையும் இல்ல, 7 மணிக்கி கோயில் நடைல உக்காந்து, பச்சப் பட்டுத் துணி போர்த்துன ஹார்மோனியத்த வெளிய எடுக்கனும்…..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஸ்ருதியெல்லாம் சரி பாத்தப்பறமா, பெருமாள் ஏழைப் பக்தனை ஆட்கொண்ட கதையையும், அவதாரம் எடுத்து அரக்கன அழிச்ச கதையையும் பாவத்தோட சொல்லனும், உழைக்கிற மனுஷனா இருந்து அவமானப்பட்ட வாழ்க்கைல உழன்றாலும் ஒரு கலைஞனாய்ட்டா மோட்சம்.

ஒடம்பத் தாண்டி, காலத்தத் தாண்டி ஓடிர்றது, அந்த ஒரு மணி நேரத்துல மிச்சமிருக்கிற 23 மணி நேரத்தையும் கரச்சுட்டு, கம்பீரமா, நான் கலைஞன்டான்னு திமிரா வாழ்க்கைய எதிர்கொள்றது. இதத்தானே கலை மனுஷனுக்கு சொல்லிக் குடுக்குது.

காலங்காலமா, கலைய, இலக்கியத்த மனுஷன் விடாமத் தொங்குறதும், கலை மனுஷன ஒரு கங்காருக்குட்டி மாதிரி பாதுகாக்குறதும் ஏதோ அனிச்சையா நடக்கல, ஒரு காரணம் இருக்கு இல்லையா?

மறுநாள் காலைல கல்யாணம், கல்யாண மண்டபத்துக்குள்ள நொழையும் போதே, காத்துல அதிர்ந்து விழுகுற தவிலும், நாதஸ்வரமும் வேற உலகத்துக்கு கூட்டிட்டுப் போகுது, சாப்ட்டு மறுபடி வந்து ஒரு பத்தடி தள்ளி நின்னா….

கம்பீரமா, இது நாட்டுக்கலைடா, மண்ணுல விழுந்து புரண்டு வாழ்க்கையோட கலந்திருக்கிற கலைன்னு செருக்கோட தவில்ல விழுகுது அடி, விரல்ல பொருத்தி இருக்குற அந்த உருளைக் “கேப்”போட சேந்து, நடனமாடுற விரல்களைப் பாத்தா கலவரமாகுது, ஒடம்பும், மனசும் இசையோட கொஞ்சம் கொஞ்சமா கலந்து இசையாவே மாறீருது.

மனச வெளிய இழுத்து மெதுவா அந்தக்கலைஞர்களயே உத்துப் பாத்தா, புறவுலத்தோட துயரங்கள் கண்ணுக்குத் தெரியுது. அந்தத் தவில் வாசிக்கிறவரு பேரு “தொட்டப்பா”, தொவச்சுத் தொவச்சு நஞ்சு போன நூல் வெளில தொங்குற ஒரு பட்டுச் சட்டை, அழுக்குக் கரை வச்ச வேட்டி..

அவருகிட்ட வேற நல்ல சட்டை நிச்சயமா இருக்கும், ஆனா, தவில் வாசிக்கும் போது அதப் போட மாட்டாரு, ஏன்னா, அது கலைக்கி செய்யுற அவமானம். தவிலக் கைல தூக்கி அடிக்கும் போது அது பட்டுச் சட்டையோடதான் இருக்கனும், பட்டு தொட்டப்பாவுக்கு இல்ல, தவிலுக்கு, அதுக்குள்ள இருந்து வர்ற இசைக்கி, தொட்டப்பாவுக்கு உள்ள இருக்குற கலைஞனுக்கு அவரே குடுக்குற மரியாதை அது.

தவிலும் நாதஸ்வரமும் கல்யாணத்துல வாசிக்கிறது இப்பவெல்லாம் ஒரு சடங்கு, அந்தக் கலைஞர்கள் வந்து, காசு குடுக்குற மொதலாளி சொல்ற எடத்துல வாசிக்கனும், இன்னும் பச்சையா சொல்லனும்னா, இசைக்கலைஞனுக்குக் கட்டளையிடறது, சொந்தக் குழந்தையை சங்கிலி கட்டி வாக்கிங் கூட்டிப் போற மாதிரி…..

வாங்குற காசுக்கு ஓடி ஓடிப் போனாலும், வாசிக்கும் போது கலைஞன் எல்லாருக்கும் மேல ஒரு பத்தடி காத்துல நின்னுருவான், இசையோட கலந்துருவான், ஒரு இல்லாமைங்கிற (Nothingness) நிலைக்குப் போயிருவான்…

நஞ்ச சட்டை, அழுக்கு வேட்டி, கட்டளைகளோட அவமானம் இதையெல்லாம் தாண்டி காத்துல பேரண்ட வெளிக்கு சமமா நின்னு குடுப்பாம் பாருங்க அந்த இசை…..

இசைக்கலை நிகழ்த்துகிற மாயம், உள்ளீடு செய்ற பெருமைன்னு உங்களால அவன நெருங்க முடியாது, தகதகன்னு அவன் உயிர் பெருவெடிப்பு நிகழ்ந்தப்ப உள்ளுக்குள்ள இருந்த வெம்மையும், அண்டார்ட்டிக்காவோட கீழ கடல் ஆழத்துல இருக்குற குளிர்ச்சியும் கலந்து இருக்கும்.

தொட்டப்பா எல்லாம் முடிச்சு, அவரோட தவில, வெல்வட் உறைக்குள்ள வைக்கிறப்ப அவர் பக்கத்துல போயி, “தும்ப சன்னாகித்து, நிம்ம ஹெசரு ஏனு” (ரொம்ப நல்லா இருந்துச்சு, உங்க பேரென்ன?” ன்னு கை குடுத்தேன்.

பொசுக்குனு கண் கலங்கீட்டாரு, கழுத்துல இருந்த கனத்த துண்ட எடுத்து கண்ணத் தொடச்சுக்கிட்டாரு.

“முன்ச்செ எல்லா மதிவகளல்லி ஜன நம் முந்தே குத்கொள்த்தாரே சாமி, ஈ ஹாடு ஆடி, இன்னொம்மெ ஹாடி அந்த்தா கேள்த்தாரே, இவாக யாரு திருகினு நோடோதில்ல, தும்ப திவசா ஆதமேல நீனு பந்து சன்னாகித்து அந்த்தா மாத்தாடிதியா சாமி”

(முன்னாடி எல்லாம், கல்யாண வீட்ல எங்க முன்னாடி வந்து கொஞ்சப் பேரு உக்காந்து கச்சேரி மாதிரிக் கேப்பாங்க, இந்தப் பாட்டுப் பாடுங்க, இப்பப் பாடுனத மறுபடி பாடுங்கன்னு, கலகலன்னு இருக்கும், இப்பவெல்லாம் யாரும் திரும்பிக் கூடப் பாக்குறதில்ல, ரொம்ப நாளைக்கி அப்பறமா நீ வந்து நல்லா வாசிச்சீங்கனு சொன்ன சாமி”) ன்னு அவரு சொன்னது கண்ணுக்குள்ளேயே இன்னுமிருக்கு.

 கை.அறிவழகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.