ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டவன் – எடப்பாடி பழனிச்சாமி !

1

தருமபுரி மாவட்ட கொங்கு இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா, அரூரில் கடந்த பிப்-05 அன்று நடைபெற்றது. கொங்கு இனத்தின் தலைசிறந்த சாதனையாளரும் இனம் கடந்து அனைவரின் அன்பைப் பெற்றவருமான மேநாள் தமிழக முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இப்பயிற்சி ஆலயத்தை அர்ப்பணித்தி பேருரையாற்றினார்.

பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம்
பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம்
2 dhanalakshmi joseph

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசும் போது, கொங்கு பல்நோக்கு பயிற்சி மையம் என்ற இந்த பயிற்சி மையம், இந்த பகுதியில் இருக்கின்ற கொங்கு வேளாளர் சமூகத்தினர் இடமிருந்து வசூலிக்கப்பட்ட 15 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கொங்கு சமுதாய இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டது என்று இங்கு சொன்னார்கள். நான் முதலமைச்சராக இருந்தவன் ஒரு கட்சிக்கு பொதுச் செயலாளராக இருக்கிறவன். ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டவனாக இருந்து வருகிறேன்.

அதுபோல தான் அண்ணன் சந்திரசேகர் அவர்களும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவராகத்தான் பார்க்கிறேன். அவருடைய பள்ளியிலே படித்த பல்வேறு ஜாதி, சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்று சமுதாயத்தின் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். அவர்களெல்லாம் நாட்டுப்பற்றோடு, சமூக அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம்
பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம்

இந்த வகையிலே,  இந்தப் பயிற்சி மையத்தில் படிக்கின்ற மாணவர்களில் 100% – 20% பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சந்திரசேகரன் அவர்கள் சொல்லும் போது நானும், சாதி மகன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆசிரியராக அனைத்து சமூக மாணவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவன் தான். அதனால், உங்கள் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.

இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டினுடைய பல்வேறு பகுதிகளிலே இது போன்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் அவர்கள் வாழ்க்கையை முன்னே கொண்டு வர வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் நடைபெற்ற நாடார் மகாஜன மாநாட்டிற்கு நான் சென்று இருந்தேன். கரிக்கோல்ராஜ் என்பவர் அதனுடைய தலைவராக இருக்கிறார். அவரும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி, அந்த சமுதாய இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொண்டேன். இந்தப் பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் அனைவரும், முன்னேற்றத்திற்குப் பயன்படும். அதை இந்தப் பகுதி மக்கள் அவசியம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது ஒரு சோதனையான காலம். அந்த நேரத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும், என்னை விமர்சனம் செய்தனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு வாரம் நீடிக்குமா? பத்து நாள் நீடிக்குமா? ஒரு மாதம் நீடிக்குமா? ஆறு மாதம் நீடிக்குமா…? என்றெல்லாம் கேள்வி கேட்டனர், கிண்டல் செய்தனர். இங்கு திரண்டு இருக்கின்ற மக்களாகிய உங்களுடைய ஆதரவோடு, மேடையில் இருக்கின்ற அமைச்சர்களுடைய ஆதரவோடு, சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவோடு, நான்காண்டுகள் இரண்டு மாதங்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்து முடித்தேன்.

4 bismi svs
பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் - புத்தகம் வெளியீடு
பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் – புத்தகம் வெளியீடு

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைத்த சாதனை வேறு எந்த அரசும் செய்யவில்லை. அதை இந்த அதிமுக அரசுதான் செய்து முடித்தது. அதுபோலவே ஒரே ஆண்டில் ஆறு சட்டக் கல்லூரிகளையும் அதிமுக அமைத்து கொடுத்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்யத்தான் போடுவேன் என்று சொன்னார். ஆனால், இன்று இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. இதுவரை என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒரே கையெழுத்தில் முடிக்கவேண்டியதாக சொன்னதை விட்டுவிட்டு, இப்போது பல லட்சம் பேரிடம் கையெழுத்துகளை வாங்கிக் கொண்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிற உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  பேசும்போது, நீட் தேர்வு ரத்து செய்வதற்கு ஒரு ரகசியம் இருக்கிறது என்று சொன்னார். சமீபத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என திமுக இளைஞரணிகள் வாங்கிய கையெழுத்து, மற்ற கூட்டணி கட்சித் தலைவர் வாங்கி கொடுத்த கையெழுத்து எல்லாம் காலால் மிதிபட்டு, குப்பைக்கு போனதை நாம் பார்த்தோம். இதுதான் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசிய வழியா அல்லது ரகசிய முயற்சியா?.

இதற்கு முன்பாகவே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்றார். உள்ள மக்களை சந்தித்து, திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு மக்களோடு பேசினார். நான் ஒரு பெட்டி வைத்துள்ளேன், அந்த பெட்டியிலே உங்களுடைய புகார்களை எல்லாம் போடுங்கள் என்று சொன்னார். அவருக்கு எப்போதுமே பெட்டி மேல் தான் கண் உள்ளது. உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி அந்த பெட்டியில் போடுங்கள், அந்த பெட்டியை பூட்டி, பத்திரமாக வைத்திருப்பேன். நான் ஆட்சிக்கு வந்ததும், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். இப்போது அந்த பெட்டிக்கான சாவி தொலைந்து விட்டது போல் தெரிகிறது.

கூடவே இன்னொரு செய்தியையும் சொன்னார், நான் உங்கள் எழுதிக் கொடுத்திருக்கிற கோரிக்கைகள் அனைத்தும் நான் நிறைவேற்றுவேன். அப்படி நிறைவேற்றவில்லை என்றால், எந்த நேரமும் என்னுடைய அறைக்கதவு திறந்தே இருக்கும் நீங்கள் நேரில் சந்தித்து உங்கள் கோரிக்கையை என்னிடம் சொல்லலாம் என்று சொன்னார். ஆனால் இன்று. அமைச்சர்களாலேயே அவரைச் சந்திக்க முடியவில்லை என்பதுதான் உண்மை நிலை. எம்.எல்.ஏ-க்களும்கூட முதலமைச்சர் சந்திக்க முடியாத நிலையில்தான் உள்ளனர்.

நான்கு மாத நான்காண்டுகள் இரண்டு மாதம் நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில், உள்ளாட்சித் துறை சார்பில் தேசிய அளவில் 140 விருதுகளை பெற்றுள்ளோம். தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பொதுப்பணித்துறைக்கு 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன. உள்ளாட்சித் துறைக்கு 26,000 ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளன. இப்படி தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் ஏரிகளுமே  அனைத்துமே பல ஆண்டு காலமாக தூர்வராமல் மூடிப் போயிருந்தன. இத்தனை ஏரிகளிலும் இருந்த வண்டல் மண்களை அள்ளி அதை விவசாயிகளுடைய நலத்துக்கு இயற்கை வருமாக வழங்கியது அதிமுக அரசு.

இருக்கின்ற செல்வங்களிலேயே சிறந்தது கல்விச்செல்வம் மட்டுமே. நாம் உயிரோடு இருக்கின்ற காலம் முழுவதும் நம்மோடு இருப்பது கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் எல்லாம், காணாமல் போய்விடும். கல்வி கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு. அதுபோன்ற படித்த இளைஞர்கள் அனைவரும் சென்ற இடத்தில் எல்லாம் சிறப்பு சேரும் வகையில், இந்த பயிற்சி மையத்தை சந்திரசேகரன் அவர்கள் தொடங்கி இருக்கிறார்.

இந்த சங்கமும், இந்த பயிற்சி மையமும் நல்ல முறையில் செயல்படுவதற்காக தாராளமாக நிதி உதவி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்திலே நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரூர் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் சார்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த பல்நோக்கு பயிற்சி மையம், மென்மேலும் வளர்ந்து, பல கல்வியாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெற்றார்..

மு.வடிவேல்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.