அ.தி.மு.க மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் !

0

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி  அ.தி.மு.க மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் . மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் என்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் மேலசிந்தாமணியில் மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் ஜெ.இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்றது.

மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம்
மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

முகாமை மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.இதில் இரத்த அழுத்தம் கண்டறிதல்,சக்கரை அளவை கண்டறிதல், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் குமார் ,சீனிவாசன், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல் ,மனோகரன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் அன்னதானம் மற்றும் இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

இதில் இரத்த அழுத்தம் கண்டறிதல்,சக்கரை அளவை கண்டறிதல், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சிகளில் மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதி வாணன்,கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைசெயலாளர்கள் வனிதா, பத்மநாதன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, பகுதி கழக செயலாளர்கள் எம்.ஆர்.ஆர் முஸ்தபா, பூபதி, வெல்லமண்டி சண்முகம்,கலைவாணன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்,நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

– சந்திரமோகன்

Leave A Reply

Your email address will not be published.