அங்குசம் சேனலில் இணைய

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய எடப்பாடி !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப்பயணத்தில் ஆக-23 அன்று திருவெறும்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளைத் தொடர்ந்து லால்குடி தொகுதியில் திருச்சி சாலையில் குழுமியிருந்த மக்களிடம் உரையாற்றினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

“லால்குடி நகரமே அதிர்கின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம். அடுத்தாண்டு தேர்தலில் இத்தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெல்வதற்கு இங்கிருக்கும் கூட்டமே சாட்சி. எழுச்சிப் பயணத்தில் அதிமுக மிகப்பெரிய எழுச்சியைப் பெற்றுள்ளது. இன்று 112-வது தொகுதியாக லால்குடியில் உங்களை சந்திக்கிறேன். இதுவரை அதிமுகவுக்கு லால்குடியில் இவ்வளவு மக்கள் கூடியது கிடையாது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

எடப்பாடி பழனிச்சாமிவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம். தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின. இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

இன்னும் 8 ஆயிரம் ஏரிகள் தூர்வாராமல் இருக்கிறது. அதுவும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தூர் வாரப்படும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரைப் பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். இன்றோ ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால், இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான். அதுமட்டுமின்றி, வறட்சி ஏற்பட்டக் காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அரசு திட்டங்கள்விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் இலட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், ஏழை, தாழ்த்தப்பட்ட, மக்களுக்கு மனை இருந்தால் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனை வாங்கி, கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கும். ஏழைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இப்பகுதியில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். வீரர்களுக்கு பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும். அதிமுக மக்களுக்காக அரசாங்கம் நடத்தியது. திமுக குடும்பத்துக்காக அரசாங்கம் நடத்துகிறது. எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காக இந்த இயக்கத்தை தொடங்கினார். அம்மா கட்டிக்காத்தார். இதனை வீழ்த்த பல இடையூறுகளைக் கொடுத்தது திமுக. அதிமுகவை உடைக்க பலரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார் ஸ்டாலின். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எதுவும் செய்யமுடியவில்லை. தொண்டர்களால் ஆளக்கூடிய கட்சி, தொண்டர்கள் தான் இயக்கத்தின் உயிர் மூச்சு. எப்படி காற்றைத் தடை போட முடியாதோ அதுபோல அதிமுகவை தடை போட முடியாது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

எம்.ஜி.ஆர். அம்மாவுக்கு வாரிசு இல்லை. மக்கள் தான் வாரிசு. ஆனால், திமுக குடும்பத்துக்காக இயங்குகிற கட்சி. மன்னராட்சியை மீண்டும் கொண்டுவருவதற்கு திமுக துடிக்கிறது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. கப்பம் கட்டுபவர்களுக்குத்தான் மரியாதை. அதிமுகவில் விசுவாசமாக இருக்கும் தொண்டர் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆகலாம். திமுகவை கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள்.

அமைச்சர் நேரு சொல்கிறார். உதயநிதி அல்ல இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றார். அப்படி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அதிமுகவில் அமைச்சர்கள் திறமையாக செயலாற்றியதால் நல்லாட்சி கொடுத்தோம். திமுகவில் கப்பம் அதிகம் கட்டுபவர்தான் சிறந்த அமைச்சர். அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது. அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகள் பெற்றோம். போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வி இப்படி பல துறைகளிலும் விருதுகளைப் பெற்றோம்.

மருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட  ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்! | Centre Approves 27% Reservation for OBC,  10% for EWS in Medical ...அதுமட்டுமில்லை, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றோம். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருது பெற்ற அரசாங்கம் அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் கை இல்லாத ஒருவருக்கு இரண்டு கைகளையும் பொருத்தினோம். ஆனால், திமுக ஆட்சியில் காலோடு போனால் உயிர் இல்லாமல்தான் திரும்பி வரமுடியும்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் ஒருவர், அவர் யாரென்று உங்களுக்குத் தெரியும். பணம் திருட்டு, நகை திருட்டு நடக்கும். இந்த ஆட்சியில் உடல் உறுப்பை திருடுகிறார்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்ததாக அரசே ஒப்புக்கொண்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்துவிட்டனர்.

அப்படி என்றால் தவறு நடந்திருக்கிறது என்று அர்த்தம். இதை எதிர்க்கட்சி சொல்லவில்லை. திமுக அரசாங்கமே தவறு நடந்திருப்பதாகக் கூறியது. ஆனால், ஏன் இன்னும் கைது செய்யவில்லை? நீங்கள் யாராவது திமுகவினர் மருத்துவமனைக்குப் போயிருந்தால் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். நாமக்கல்லில் ஒரு பெண்மணிக்கு கிட்னியை எடுக்க முடியவில்லை என்று கல்லீரலை எடுத்துவிட்டனர். இது,  பத்திரிகையில் வந்த உண்மை செய்தி.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மக்கா சோளம் பயிரிட்ட விவசாயிகள் நிலத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்கியது. அதற்கு 186 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தோம். அடுத்த ஆண்டு எங்கெல்லாம் அமெரிக்கன் படைப்புழுவால் சேதமடைந்ததோ, அங்கெல்லாம் 48 கோடியில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து மக்கா சோளத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினோம்.

திருமண உதவி திட்டம்
திருமண உதவி திட்டம்

ஏழைப் பெண்களுக்கு பொருளாதார சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். அப்போதுகூட மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாததுக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.

கிராமப்புற ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகிவிட்டனர்.

விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. இதுபற்றி முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. முதல்வர் வெளிநாடு போகிறார். ஏற்கெனவே தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்குப் பதிலாக சைக்கிள் ஓட்டினார். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அப்போது, மருத்துவமனையிலே அதிகாரிகளை அழைத்துப் பேசுவதாக நாடகம் போடுகிறார். ஸ்பெயின் சென்ற 18 நாளில் தமிழக மக்கள் அவரது கண்ணுக்குத் தெரியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உங்களுடன் ஸ்டாலின் என்று இப்போது நான்காண்டு கழித்து மக்களிடம் ஸ்டாலின் வந்திருக்கிறார். வீடுவீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால், அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். நடக்குமா? எல்லாம் நாடகம். 46 பிரச்னைகள் இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 8 மாதத்தில் ஆட்சி முடியப் போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? சதுரங்க வேட்டை படத்தில் வருகிறதுபோல ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வர இப்படி விளம்பரம் செய்கிறார்கள்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம்.

லால்குடியில் புதிய பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் அமைத்தோம். கோட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், ரயில்வே மேம்பாலம் அமைத்தோம். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம், வாய்க்கால்கள் தூர்வாரல், கோயில் கும்பாபிஷேக நிதி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது, தூர்வாரப்பட்டது, தடுப்பணை கட்டப்பட்டது.

இப்போது நீங்கள் கொடுத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.