அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எடிசன் விழாவில் வெடித்த ‘த.வா.க.’ வேல்முருகன்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மலேசியாவைச் சேர்ந்த தமிழரான செல்வக்குமார் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் திறமையாளர்களுக்கு ‘எடிசன்’ பெயரில் விருது வழங்கி வருகிறார். எடிசன் விருது 18-ஆவது ஆண்டு விழா வரும் 24-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடக்கவுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்வு சென்னை அம்பிகா எம்பயர் ஓட்டலில் மே.01-ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்வுக்கு நடிகர் ராதாரவி, நடிகை அம்பிகா, டைரக்டர் விக்ரமன், ஸ்டண்ட் சில்வா,  பாடகர் அந்தோணிதாசன், நடிகர் ஜெகன், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி ஆகிய பிரபலங்களுடன், அரசியல் பிரபலமான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் கலந்து கொண்டார்.

விருது நிறுவனரான செல்வக்குமார் வரவேற்றுப் பேசினார். டாக்டர் ரெட்டி, நடிகர் ஜெகன், பாடகர் அந்தோணிதாசன் ஆகியோர் ”தொடர்ந்து பதினேழு ஆண்டுகள் விருது வழங்குவதென்பது சாதாரணமல்ல. இதை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து வரும் செல்வக்குமாருக்கு பாராட்டுகள்” என்றனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

டைரக்டர் விக்ரமன், “சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருதை என் மகன் கனிஷ்கா வாங்கினான். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சிறந்த ஹீரோவுக்கான விருதையும் வாங்குவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நடிகை அம்பிகா, “பல ஆண்டுகளாகவே எனக்கு செல்வக்குமாரைத் தெரியும். இந்த நிகழ்ச்சிக்கூட வெளியூரிலிருந்து ஃப்ளைட் பிடித்து வந்தேன். அதே போல் மே.24-ஆம் தேதி இந்தியாவில் இருந்தால் விருது விழாவுக்கு நிச்சயம் வருவேன்”.

யாவரும் கேளீர்

ராதாரவி, “சினிமாவில் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களை பெருமைப்படுத்தும்விதமாக எடிசன் விருது வழங்குவது மிகவும் பெருமைக்குரியது. இன்னும் பல ஆண்டுகள் இந்த விருதினை செல்வக்குமார் தொடர்ந்து வழங்க வேண்டும் என நான் சார்ந்த திராவிட இயக்கத்தின் சார்ப்பாக வாழ்த்துகிறேன்”.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

வேல்முருகன், “அண்ணன் செல்வக்குமாரின் அத்தனை வெற்றிகளிலும் அவரது மனைவி தான் உறுதுணையாக இருக்கிறார். சினிமாக் கலைஞர்களுக்கு தொடர்ந்து பதினேழு ஆண்டுகள் விருதுகள் கொடுப்பதை நேர்மையான முறையில் செய்து வருகிறார் செல்வக்குமார். ஜெயலலிதா ஆட்சியின் போது தாமிரபரணி தண்ணீரை கோக்கோ-கோலா கம்பெனிக்காரன் உறிஞ்சுவதை எதிர்த்து அங்கே போராட்டம் நடத்தினேன். அப்போது ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் போலீசார் என்னை மிருகத்தனமாக தாக்கியதில் முதுகுத்தண்டு உடைந்துவிட்டது. அதற்கு ஆபரேஷன் பண்ணிய பிறகு என்னால்  நீண்ட நேரம் உட்கார முடியாது. அப்போது கோக்கோ கம்பெனிக்காரன் எனக்கு மிகப்பெரிய தொகை தருவதாக ஆசை காட்டியும் நான் மசியவில்லை.

வேல்முருகன்
வேல்முருகன்

அதே போல் விஜய்யின் ‘கத்தி’ படத் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜபக்சேவின் பினாமி என்பதற்காக போராட்டம் நடத்தினேன். அப்போது சுபாஷ்கரனே நேரடியாக என்னிடம், “உங்களுக்கு பெரிய அமெளண்டும் உங்க ஆளுகளுக்கு கார்களும் வாங்கித்தர்றேன்னு பேரம் பேசினார். அதற்கும் நான் மசியவில்லை. என் பொதுவாழ்வில் ஒரு நயா பைசா கூட லஞ்சமோ, கமிஷனோ வாங்கியதில்லை.

இந்தத் தேர்தலுக்குக்கூட பெரிய தொகை தர்றேன்னு அண்ணன் செல்வக்குமார் சொன்னார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அரசியலைத் தாண்டி என் மீது எப்போதும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் செல்வக்குமாருக்காகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்”.

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.