அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“என்னை செருப்பால் அடிங்க”- ‘ட்ரெய்ன்’ விழாவில் மிஷ்கின் டென்ஷன்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆக முடியாமல் இருந்த கலைப்புலி தாணுவின் ’ட்ரெய்ன்’ படம் ஒருவழியாக வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகிறது. மிஷ்கின் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் மேனன், ஐரா தயானந்த், மாளவிகா, தியா ஷர்மா,, ப்ரீத்தி கரன், நரேன், கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையும் மிஷ்கினே. ஒளிப்பதிவு : ஃபெளசியா பாத்திமா, பி.ஆர்;ஓ : ரியாஸ் கே.அஹமது, பாராஸ் ரியாஸ்.

‘ட்ரெய்ன்’-ன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் கடந்த 12-ஆம் தேதி இரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் அமீர், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சசி, விக்னேஷ் சிவன், மடோன் அஸ்வின், தமிழரசன் பச்சமுத்து, அருண் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பும், நிகழ்ச்சிக்கு இடையிலும் இசைக்கச்சேரி நடத்தினார் மிஷ்கின். அதில் ஸ்ருதி ஹாசன், சஞ்சய் சுப்பிரமணியம் உட்பட பலர் பாடினார்கள்.

படத்தில் நடித்த கலைஞர்கள் மூன்று மூன்று பேராக மேடையேறி மிஷ்கினின்  டைரக்‌ஷன் திறமை, ட்ரெய்ன் படத்தின் பெருமைகளைப் பேசினார்கள்.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

அமீர் பேசும் போது, “மிஷ்கின் ஒரு ஞானக்கிறுக்கன். அப்போ டி.ராஜேந்தர்னா, இப்ப மிஷ்கின் தான்” என்றார்.

கலைப்புலி தாணு, “நான் பெறாத பிள்ளை தான் மிஷ்கின். ஒருபடத்தின் கதையையே கேட்காமல் நான் தயாரித்த படம் தான் இந்த ‘ட்ரெய்ன்’. பொதுவாக ட்ரெய்ன் சம்பந்தப்பட்ட சீன்களுக்கு ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நான்கு கம்பார்ட்மெண்ட் உள்ள ரயிலில் தான் ஷூட்டிங் பண்ணுவார்கள். ஆனால் நான் இந்தப் படத்தை எட்டு கம்பார்ட்மெண்ட்டில் ஷூட் பண்ணிருக்கேன். எல்லாமே மிஷ்கினின் மூளைக்காகத் தான். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி மனிதநேயத்தின் மறுபக்கம். ஒளிப்பதிவாளர் ஃபெளசியா பாத்திமாவின் உழைப்பு அபாரம். மிஷ்கின் இசையமைத்தை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்தேன். அதை அடுத்த வாரம் வெளியிடுவேன். ஆகஸ்ட் மாதம் ‘ட்ரெய்ன்’ ரிலீசாகும்”.

மிஷ்கின், “நந்தலாலா கதையை முதலில் தாணு சாரிடமும் விக்ரம் சாரிடமும்  தான் சொன்னேன். விக்ரமிற்கு கதை புரிந்தது, தாணு சாருக்குப் புரியாததால அவரின் தயாரிப்பில் படம் பண்ண முடியல. இப்ப ட்ரெய்ன் கதையைச் சொன்னப்ப, விஜய் சேதுபதியை வைத்து பண்ணலாம்னு தாணு சார் தான் சொன்னார். பத்து வருசத்துக்கு முன்னால விஜய் சேதுபதியை நான் ரிஜெக்ட் பண்ணினேன். இப்ப அவருடன் கைகோர்த்திருக்கேன். இந்த ட்ரெய்ன் படம் நல்லாயில்லைன்னா என்னை செருப்பால் அடிங்க” என டென்ஷனாகப் பேசினர் மிஷ்கின்.

விஜய் சேதுபதி, “இங்க வந்திருக்கும் எல்லோருமே எனக்காக வரலை, மிஷ்கின் சாருக்காகத் தான் வந்திருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்தப்ப என்னை ரிஜெக்ட் பண்ணியவர் மிஷ்கின். அதுக்கப்புறம் நான் ஹீரோவான பிறகு என்னிடம் டேட் கேட்டார். ஆள் பார்க்க சைக்கோ மாதிரி இருந்ததால நான் ரிஜெக்ட் பண்ணினேன். அவரின் ‘சைக்கோ’ படம் பார்த்துட்டு எட்டு மணி நேரம் அவரிடம் பேசிருக்கேன். ‘பிசாசு-2’வில் எனக்கு சின்ன ரோல் கொடுத்தார்.  இப்ப ‘ட்ரெய்ன்’ல ஃபுல்  மீட் பண்ணிருக்கோம். அறிவையும் அன்பையும் நிறையப் பேரிடம் பகிர்ந்து கொள்ளும் பரோபகாரி மிஷ்கின். இந்த ‘ட்ரெய்ன்’ கண்டிப்பா சூப்பர்ஹிட்டாகி, தாணு சாருக்கு செமத்தியான கலெக்‌ஷனைக் கொடுக்கும்”.

—   ஆண்டவர்  

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.