அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சுலபமாக கல்வி கடன் வேண்டுமா ? மாணவா்களுக்கான அறிய வாய்ப்பு!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் 2025, 24.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் / பிசியோதெரபி கல்லூரிகள் / பி.பாம் கல்லூரிகள் / பொறியியல் கல்லூரிகள் / வேளாண் கல்லூரிகள் / சட்டக் கல்லூரிகள் /கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐடிஐ நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ / மாணவியர்கள் அனைவரும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கல்வி கடன் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கல்வி கடன் கோருவதற்கு தேவையான ஆவணங்கள் :

மாணவர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை, மாணவர் மற்றும் பெற்றோர் பான்கார்டு, மாணவர் சாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, மாணவர் மற்றும் பெற்றோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / மாற்றுச் சான்றிதழ் / கல்வி சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சேர்க்கை கடிதம். கல்லூரி கட்டண விபரம், கல்வி பயிலும் சான்று. (Bonafide certificate). முதல் பட்டதாரி சான்று. கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் (Joint Account Pass Book) இவைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.