அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வாலிபால் விளையாட்டால் எட்டாம் வகுப்பு மாணவன் பலி…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்ல வண்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் விவசாயி இவரது மகன் செல்வம் வயது 13. இவர் கரட்டாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மகன் பாரதி வயது 15 இவர் நடுவலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

செல்வம்
செல்வம்

இந்நிலையில் நேற்று மாலை மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது இதில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்து கொண்டுள்ளனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சற்று நேரத்தில் செல்வம் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்ற செல்வத்திற்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் செல்வத்தை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

செல்வம்
செல்வம்

இது பற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து. செல்வம் இறந்ததற்கான காரணம் என்ன?  ஒன்பதாம் வகுப்பு மாணவன் பாரதி அடித்ததால் தான் இறந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

—    சிவகுமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.