மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் போராட்டம் !
தமிழ்நாடு சட்டசபையில் மின் துறை அமைச்சர் மின்வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள் டேபிள் ரீடிங் போடுவதாக ஊழியர்களின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை கண்டித்தும். நேரடியாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் ஒப்பந்ததாரர் மூலமாக குறிப்பிட்ட காலத்திற்கு( 5 வருடம்) மட்டும் நியமனம் செய்யும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர் மூலம் தொழிலாளர்களை நியமிக்காமல் நேரடியாக பணி வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
தனியாரிடம் இத்திட்டத்தை ஒப்படைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் இன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார் போராட்டத்தை விளக்கி மாநிலத் துணைத் தலைவர் ரெங்கராஜன், திட்ட செயலாளர் பழனியாண்டி, திட்ட தலைவர் நடராஜன், திட்ட பொருளாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Comments are closed, but trackbacks and pingbacks are open.