அங்குசம் பார்வையில் ‘லெவன்’   

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ஏ.ஆர்.எண்டெர்டெய்ன்மெண்ட்’ அஜ்மல்கான் & ரியா ஹரி. எழுத்து—இயக்கம் : லோகேஷ் அஜ்லிஸ். நடிகர்-நடிகைகள்: நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷஷாங், அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா, ஆர்ஜய், கீர்த்தி தமராஜு. ஒளிப்பதிவு : கார்த்திக் அசோகன், இசை : டி.இமான், எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், தமிழ்நாடு ரிலீஸ் : ’சுஷ்மா சினிஆர்ட்ஸ்’ ஜி.என்.அழகர்சாமி. பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.

நாம்  சினிமா பார்க்க ஆரம்பித்த வயதிலிருந்து, இப்போது வரை இந்திய சினிமாவில் நமக்கு விவரம் தெரிந்து இப்படியொரு அருமையான கதை, அந்தக் கதையை மிகச் சீராகக் கொண்டு செல்லும் திரைக்கதை, அந்த திரைக்கதைக்கு வலுவூட்டும் காட்சிகள், அந்தக் காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டும் சங்கிலிப் பின்னல் காட்சிகள் இவையெல்லாம் ஒருங்கே அமைந்த இந்த ‘லெவன்’ சினிமாவைப் போல நாம் பார்த்ததில்லை. எனவே இதை எழுதி, இயக்கிய லோகேஷ் அஜ்லிஸை மனம் திறந்து முதலில் தாராளமாக பாராட்டிவிடுவோம்.

Kauvery Cancer Institute App

இப்ப கதைக்கு வருவோம்….

சென்னை மாநகரின் ஒதுக்குப்புற ஏரியாக்களில் ஆங்காங்கே சில இளம் வயது ஆண்களும் பெண்களும் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். அதே சமயம் சென்னையில் இயங்கி வரும் சில ஃபைனான்ஸ் கம்பெனிகளைக் குறி வைத்து ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. இந்த மாபாதக சம்பவங்களால் மாநகர போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன் கடும் டென்ஷனாகிறார்.  அசிஸ்டெண்ட் கமிஷனர் ஷஷாங்கிடம் எரித்துக் கொல்லப்படுவர்களின் வழக்கை ஒப்படைக்கிறார் கமிஷனர் ஆடுகளம் நரேன். சைக்கோ கொலைகாரனாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஷஷாங் விசாரிக்க களம் இறங்கும் போது, ஒரு சாலைவிபத்தில் படுகாயமடைந்து கோமாவில் விழுந்துவிடுகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

லெவன்இதனால் கொள்ளைக் கும்பலைப் பற்றி விசாரிக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனர் அரவிந்தன் ஐபிஎஸ்ஸிடமே [ நவீன் சந்திரா] எரித்துக் கொல்லபடுபவர்களின் வழக்கையும் ஒப்படைக்கிறார் கமிஷனர். விசாரணக் களத்தில் அரவிந்தன் இறங்கி பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எந்தவொரு தடயமும் ஆதாரமும் சிக்காததால் ரொம்பவே திணறுகிறார்.

ஒரேயொரு பிணத்தின் வலது கெண்டைக்கால் பகுதியில் ஆபரேஷன் செய்து வைக்கப்பட்ட சின்ன பிளேட் ஒன்று சிக்குகிறது. அதை ஆதாரமாக வைத்து விசாரிக்கும் போது வலுவான ஆதாரம் ஒன்று கிடைக்கிறது. அதற்கடுத்து   எரித்துக் கொல்லப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வீட்டைத் தேடிப் போகும் போது, அங்கே பேரதிர்ச்சியான தடயம் ஒன்று சிக்குகிறது.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

அந்த சின்ன பிளேட்டும் பேரதிர்ச்சியான தடயமும் என்ன? கொலையாளி யார்? என்பதை கடைசி பதினோரு நிமிடம் வரை சஸ்பென்ஸ் குறையாத, பார்வையாளர்கள் யாருமே யூகிக்க முடியாத சூப்பர் க்ரைம்-த்ரில்லர் தான் இந்த ‘லெவன்’.

லெவன்ஐபிஎஸ் அதிகாரிக்கேற்ற மிடுக்கு, முறைப்பு, போலீஸுக்கே உரிய ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் பிரைய்ன், இடையிடையே ரியா ஹரியுடன் சின்னச்சின்ன லவ்ஸ் என நவீன் சந்திரா.. சபாஷ் சந்திரா என சொல்ல வைக்கிறார். ஆக்‌ஷன் சீக்வென்ஸிலும் கடுமையாக உழைத்திருக்கிறார். நவீன்சந்திராவின் வரவு நல்வரவாகட்டும்.

கதைக்குள் ரித்விகா வந்த பின் தான் பல திடுக்கிடும் திருப்பங்களும், ‘விருமாண்டி’ அபிராமி எண்ட்ரியான பின் வந்து கொண்டே இருக்கும்  ஸ்கிரிப்ட்டின் பிரிலியண்ட் ட்விஸ்டுகளும் இந்த லெவனுக்கு மாபெரும் சப்போர்ட்டாக இருக்கிறது.  மேற்படி இருவரும் ஃப்ளாஷ்பேக் போர்ஷனின் சுவாரஸ்யத்திற்கு க்யாரண்டி என்றால், சப்-இன்ஸ்பெக்டர் மனோகராக வரும் திலீபனும் இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் ஷஷாங்கும், ரியா ஹரி யார் என்ற மர்ம முடிச்சும் கரண்ட் சீக்னென்ஸுக்கு டபுள் க்யாரண்டி.

லெவன்இரவு நேர சஸ்பென்ஸையும் திகிலையும் கரெக்டாக கனெக்ட் பண்ணி, ரசிகர்களுக்குள் சிலிர்ப்பு அனுபவத்தைக் கடத்துகிறார் கேமராமேன் கார்த்திக் அசோகன். அதிலும் ஐந்து நிமிட இரவு நேர கார் சேஸிங் சீன் மிக அபாரம். படத்தின் மிகப்பெரிய பில்லர் மியூசிக் டைரக்டர் டி.இமான் தான். க்ரைம்-த்ரில்லர் ஜானரில் இது அவருக்கு முதல் படம் என்றாலும் பின்னணி இசையில் பின்னியெடுத்துவிட்டார். அதிலும் சைக்கோ கொலைகாரன் எண்ட்ரியாகும் போதெல்லாம் ஒலிக்கும் பி.ஜி.எம். இதயத்துடிப்பை எகிற வைக்கிறது. மோஸ்ட்லி சீனியர் எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த், ஏழெட்டு நிமிட காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் சூப்பர் க்ரிப்பாக இருந்திருக்கும்.

எனவே .. இந்த ‘லெவன்’ படத்தைத் தயாரித்த அஜ்மல்கான், ரியா ஹரி, டைரக்டர் லோகேஷ் அஜ்லிஸ் ஆகிய மூவருக்கும் தாராளமாக சபாஷ் போடலாம். ஏராளமாக பாராட்டலாம்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.