போட்ட பணம் வரலனா எங்க பிணம் இங்க விழும்.. எல்ஃபின் அலுவலகத்தில் நள்ளிரவில் தற்கொலை போராட்டம் வீடியோ

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாநகரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அலுவலகத்தில் ஒன்றாக இருந்து வருவது Elfin நிதி நிறுவன அலுவலகம்.

 

Frontline hospital Trichy

திருச்சி மன்னார் புறத்தில் அமையப்பெற்றுள்ள எல்பின் அலுவலகத்தில் இன்று 31/10/2021 காலையில் இருந்து 120-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் தனது குழந்தைகளுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

trichy elfin raja office siege

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

Elfin நிதி நிறுவனத்தின் நிறுவனர் ராஜா என்கின்ற அழகர்சாமி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் 2,500 கோடிக்கு மேல் பணத்தினை மோசடி செய்து விட்டதாகவும், எங்களை தனது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறும் அதன்மூலம் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி,

ஏழை எளிய மக்களிடம் பணத்தை சுரண்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார் .எங்களது பணத்தை கேட்டால் மிரட்டல் விடுகிறார். இதுவரை எங்களுக்கு சரியான பதில் அளிக்காமல் அலைக்கழித்து வருகிறார். 

இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று நாட்கள் கடந்து மாதங்கள் கடந்து வருடங்கள் கடந்து விட்டது. இதுவரை எங்களுக்கு பணம் எங்களிடம் வந்து சேரவில்லை.தீபாவளி பண்டிகையை ஒரு நல்ல விதத்தில் கொண்டாட கூட வழியில்லாமல் குழந்தை குட்டிகளுடன் தவித்து வருகின்றோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போது 7 டீம்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் ஒன்றிணைந்து உள்ளோம். நாங்கள் திருப்பூர், திருப்பத்தூர், சேலம், தஞ்சாவூர் என 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ளோம்.

trichy elfin raja office siege

இவ்வளவு நாளாக நாங்கள் அமைதியாக இருந்ததற்கு காரணம் நேற்று 30/10/2021 ஆம் தேதி அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாக வாய்ஸ் மெசேஜ் குரூப்பில் ராஜா பதிவிட்டிருந்தார்.

ஆனால் இப்போதுவரை எந்த வித பணமும் எங்களுக்கு வந்து சேரவில்லை. நாளை 1/11/2021 மதுரை கோர்ட்டில் ஆஜராகி ராஜா எங்களது பணத்தை தர வேண்டும். உரிய அதிகாரிகள் எங்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.

விடியும் வரை காத்திருக்கும் நாங்கள் இந்த அலுவலகத்தை விட்டு ஒன்று பணத்தோடு செல்வோம். இல்லைனா எங்கள் பிணம் தான் செல்லும். இங்குள்ள நாங்கள் குழந்தை குட்டிகளுடன் தற்கொலை செய்து கொள்வோம்.

எங்களுக்கு வாழ்வதற்கு வழியில்லை எங்கள் பணத்தை அதிகாரிகள் மீட்டு கொடுக்க வேண்டும்.

-இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.