திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு – மாவட்ட ஆட்சித்தலைவா் தகவல்

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும். இப்பணியிடங்களுக்கு  வேலை நடுநா்கள் கீழ்கண்டவாறு நிரப்பப்படுகின்றன.

மாவட்ட சுகாதார அலுவலகம், திருச்சிராப்பள்ளி:

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S.டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020. தொலைபேசிஎண்: 0431-2333112

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) சுகாதார ஆய்வாளர்- துப்புரவு ஆய்வாளர் படிப்பு – மாத ஊதியம் ரூ.14000- Programme Cum Administrative Assistant (இளங்களைமற்றும் முதுகலை கணிணி அறிவியல் பயன்பாடு படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சுபடிப்பு) மாதஊதியம் ரூ.12000-

 

முதல்வர், அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சி:

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி: முதல்வர்,மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, புத்தூர், திருச்சி-620017. தொலைபேசிஎண்: 0431-2771465, 0431-2771466, 0431-2771467

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மருத்துவமனை தரவு மேலாளர்  (Hospital Quality Manager) (Dental / AYUSH Paramedical Degree with Master in Hospital Administration / Health Management / Public Health and minimum of 2 years experience)  மாத ஊதியம் ரூ.60000-, ஆய்வகநுட்புநர் (DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.13000-, இயன்முறை வல்லுநர் (முழு நேர 4 வரு Bachelor in Physiotherapy படிப்பு) மாத ஊதியம் ரூ.13000-, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.8500-, பாதுகாவலர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.8500- துப்புரவு உதவியாளர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.8500-

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், திருச்சி:

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர்,மருத்துவம் (ம) ஊரகநலப்பணிகள் (ரோசன் மகால் அருகில்),V.O.C.சாலை, திருச்சி-620001. தொலைபேசிஎண்: 0431-2414069

அறுவைசிகிச்சைஅரங்குஉதவியாளர் (ழுவு யுளளளைவயவெ) (12-ம் வகுப்புதேர்ச்சிமற்றும் ழுவு யுளளளைவயவெ உழரசளநபயிற்சிமுடித்திருக்கவேண்டும்) மாதஊதியம் ரூ.11200-,பல்நோக்குமருத்துவமனைபணியாளர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்கவேண்டும் மற்றும் எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்) மாதஊதியம் ரூ.8500-,

 

துணை இயக்குநர் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம்,அரசு தலைமை மருத்துவமனை வளாகம், திருச்சி:

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி: துணை இயக்குநர்(காசநோய்),மாவட்டகாசநோய் மையம்,அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புத்தூர், திருச்சி-620017. தொலைபேசிஎண்: 0431-2770525

மருத்துவ அலுவலர் (காசநோய்) (இளங்கலை மருத்துவர் படிப்பு(MBBS) முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.60000-,முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supervisor (TB)  (ஆய்வக நுட்புநர் படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களிலிருந்து பெறப்பட்ட பட்டம் அல்லது பட்டய கல்வி தகுதி மற்றும் குறைந்தபட்ச இரண்டு மாதகாலத்திற்கான கணிணி பயன்பாடு பயிற்சி மற்றும் இரண்டு சக்கர வாகனம் இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இயக்க தெரிந்திருக்க வேண்டும்) மாதம் ஊதியம் ரூ.19800-,சுகாதார பார்வையாளர்(Health Visitor-TB) அறிவியல் பாடத்திட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணிணி இயக்குநர் பயிற்சிமற்றும் தொடர்புடைய அனுபவ சான்றிதழ்) மாத ஊதியம் ரூ.13300-,ஆய்வக நுட்புநர் (காசநோய்) (DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.13000-

இப்பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது 59-க்குள் இருக்க வேண்டும்.  இதற்கான விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளமுகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு 13.12.2024 மாலை 5.00 மணிக்குள் நேரிலோஅல்லது பதிவுதபால் மூலமோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Suvitha.s says

    Diploma in patient care assistant

Leave A Reply

Your email address will not be published.