நீர்வழித்தடங்கள் ஆக்கிரப்பு ! அதிரடியாக களமிறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் !
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி ஊராட்சியில் வேலுப்பட்டி ஏரிக்கு வரும் பாசனக்கால்வாய்களை அப்பகுதியில் இயங்கிவரும் பல்வேறு கம்பெனிகள் ஆக்கிரமித்திருந்தன. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காமாட்சி ஏரியை சுற்றி அமைந்துள்ள கம்பெனிகள் சுமார் 4.20 ஹெக்டேர் அளவுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்திருந்தார்கள். இதனை ஆதாரத்தோடு, வேலுப்பட்டி விவசாயிகள் பூதலூர் வட்டாட்சியர் கலைச்செல்வியிடம் புகார் அளித்திருந்தார்கள்.

இதனையடுத்து, பூதலூர் வட்டாட்சியர் கலைச்செல்வி தலைமையில், துணை வட்டாட்சியர், பூதலூர் காவல்துறையினர், செங்கிப்பட்டி வருவாய் ஆய்வாளர், வெண்டையப்பட்டி மற்றும் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர்கள் அதிரடியாக களமிறங்கினர். இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் மேற்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பாசனக்கால்வாயை ஆக்கிரமித்திருந்த கம்பெனிகளுக்கு எதிராக, அதிரடியாக களத்தில் இறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வேலிப்பட்டி கிராம விவசாயிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.
— தஞ்சை க.நடராஜன்.