“அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கான நிலையான வணிக மாதிரிகள்” சிறப்பு சொற்பொழிவு
புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் மேதமை துறையின் மாணவருக்கென ஏற்படுத்தப்பட்ட தொழில் முனைவோர் குழு சார்பில் ஏற்பாடு 05 ஜூலை, 2025 அன்று செய்யப்பட்டிருந்தது . இதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII – TN) திட்ட அதிகாரி மார்ட்டின் ரூசோ கலந்து கொண்டு ஒரு வணிகத்தைத் தொடங்குவதில் உள்ள நடைமுறை நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில் நிலையான மற்றும் எதிர்காலம் சார்ந்த வணிக மாதிரிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். தொழில்முனைவோரை ஆதரிக்கும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்கள் தங்களிடையே புதுமையான யோசனைகளை எவ்வாறு வெற்றிகரமான மற்றும் நிலையான முயற்சிகளாக மாற்ற முடியும் என்பதை குறித்து பேசினார்.
இத்தகைய சிறப்பு நிகழ்விற்கு கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் D. குமார், வணிகவியல் மேதமை துறையையும், குழு மாணவர்களையும், இத்தகைய குழுக்களை வழிநடத்தும் பேராசிரியர் A. செர்லின் வினோதா அவர்களையும் பாராட்டி மாணவர்களிடையே உருவாக்கத்திறனை வளர்த்துக்கொள்ள இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் துறையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.
சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான திட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக தொழில்முனைவோர் குழுவை பாராட்டிய அவர், இதுபோன்ற முயற்சிகள் துறையின் முற்போக்கான பார்வையை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை எடுத்துரைத்தார். இத்தகைய சொற்பொழிவில் வணிகவியல் மேதமை துறைத்தலைவர் டாக்டர்.வி.பாஸ்டின் ஜெரோம் குழு உறுப்பினர்களை வாழ்த்திப்பேசினார். இதில் சுமார் 6௦ மாணவர்கள் பங்கேற்றார்கள்.