திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கணிணி அறிவியல் துறையும் திருச்சி இளங்கனல் தொண்டு நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் 07.02.2025 அன்று கிராப்பட்டி புனித தெரசாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

ஆலய பங்கு தந்தை விக்டர் இம்மானுவேல் உதவி பங்கு தந்தை பிரகாஷ் இளங்கனல் தொண்டு நிறுவன தலைவர் ரஞ்சித் அன்பிய ஒருங்கிணைப்பாளர் பிலிப் கணிணி அறிவியல் துறை பேராசிரியர் இருதய மேரி ஆஷா பேராசிரியர் அமலோற்பவ அகிலா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்க துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கணிணி அறிவியல் துறை மாணவர்கள் அன்பிய தலைவர் துணைத் தலைவர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
— அங்குசம் செய்திப்பிரிவு.