முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த மறு வேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” எனும் புதிய திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். அதன்படி தமது தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில், தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோடிரூபாய் வரையிலான கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என்றஅறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

அதன்படி, தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்/சார்ந்தோர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் இராணுவப் பணியின் போதுஉயிரிழந்த படை வீரர்களின் மறுமணம் செய்து கொள்ளாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்து வாழும் 25 வயதிற்குட்பட்ட திருமணமாகாத மகன், திருமணமாகாத மகள் மற்றும் கைம்பெண் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்துபயன் பெறலாம்;.

இனிய ரமலான் வாழ்த்துகள்

‘முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம்
‘முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதிவு செய்து மறு வேலைவாய்ப்பு பெறாமல் உள்ள, முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் மறுமணமாகாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்து வாழும் திருமணமாகாத மகன்,மகள் மற்றும் கைம்பெண் மகள்கள் ஆகியோர் மேற்காணும் திட்டத்தில் தொழில் தொடங்கி பயடையலாம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இத்திட்டத்திற்கான வழிமுறைகள்:

முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 55. மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை பிரிந்தம கள்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்புஏதும் இல்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் இதுதொடர்பாக விண்ணப்பிக்க வேண்டிய விவரங்களை துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசிஎ ண்ணிலோ (0431-2960579) தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.