மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணியிடம் நியமனம்!
திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் One Stop Centre (OSC) திட்டத்தின் கீழ் பணிபுரிய பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper)-1 பாதுகாவலர் (Security)-2, மூன்று பணியிடம் நியமனம் செய்ய பின்வருமாறு கல்வித் தகுதியினைஉடையவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper)-1 பாதுகாவலர் (Security)-2 கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம்
பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்,பெண்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்கலாம், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் உள்ளுரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளர் மாதசம்பளம் ரூ.10000/-மட்டுமே வழங்கப்படும் பாதுகாவலர் மாதசம்பளம் ரூ.12000/- மட்டுமே வழங்கப்படும், குறைந்தது 3 வருடம் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விருப்பமுடைய பெண் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 15.02.2025 அன்று மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.