மகளிர் குழுவினர் தயாரிப்புகளை கொண்டு செல்ல கட்டணமில்லா பேருந்து அறிவிப்பு !
மகளிர் குழுவினர் தயாரிப்புகளை கட்டணமின்றி பேருந்துகளில் கொண்டுசெல்ல அனுமதி !கனிவாக நடக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு.
முதல்வர் அறிவிப்பின்படி மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கிமீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச்செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தயாரிப்பு பொருட்களுடன் ஏறும் சுயஉதவிக் குழு பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
மனளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், சுயஉதவிக் குழு பெண்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி அனைத்து போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகள் விவரம் வருமாறு:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள், ஏசி பேருந்துகளை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களை கட் டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளில் 100 கிமீ வரை கட்டணமின்றி பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இதற்காக சுயஉதவிக் குழு பெண் பயணிகளுக்கு ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை’ நடத்துநர் வழங்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தயாரிப்பு பொருட்களை கொண்டு வரும் சுயஉதவிக்குழு மகளிரிடம் ஒட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கனிவாக நடந்து கொள்வதுடன், பொருட் களை ஏற்றி, இறக்க போதுமான நேரத்தையும் வழங்கி, பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண் டும். அதேநேரம் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் பெரிய சுமை களையும், ஈரமான சுமைகளையும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக பயணி இல்லாமல் பொருட் களை ஏற்றக்கூடாது.
பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத் தொகையை அரசு திருப்பிவழங்குவதை போல, ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டில்’ நகர பேருந் துகளுக்கு ரூ.16, புறநகர் பேருந் துகளுக்கு ரூ.45 வீதம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் கழகங்கள், துறைக்கு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.