‘எஸ்’கேப் ஆன சூப்பர்ஸ்டார்… வில்லங்க வங்கியும் ஆர்.ஜே.பாலாஜியும்!
‘எஸ்’கேப் ஆன சூப்பர்ஸ்டார்… வில்லங்க வங்கியும் ஆர்.ஜே.பாலாஜியும்!
கடந்த ஜூன்17ம் தேதி ரிலீசான ‘வீட்ல விசேஷம்’ படத்தின் சக்சஸ் மீட்டை ஜூன் 22ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்தினார் படத்தின் டைரக்டரான ஆர்.ஜே.பாலாஜி. சக்சஸ் மீட் நடந்த நட்சத்திர ஓட்டலான ‘தி பார்க்’ ஹோட்டலுக்கு எதிரே இருக்கும் பிரம்மாண்ட கட்டிடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘எஸ் பேங்க்’ என்ற தனியார் வங்கி இயங்கி வந்தது.
இந்த பேங்கின் டைரக்டர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மச்சினன், அதாவது மியூஸிக் டைரக்டர் அனிருத்தின் அப்பா ரவிராகவேந்திரா இருந்தார். இதனால் பல கோடிகளை டெபாசிட் செய்திருந்தார் சூப்பர் ஸ்டார். திடீரென பேங்கில் சில குழப்படி களும் குளறுபடிகளும் ஆரம்பித்ததும் தனது டெபாசிட்டை ரிட்டர்ன் எடுத்தார் ரஜினி. அந்தக் கட்டிடத்தில் இயங்கிய பேங்கும் மூடப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் சென்னை அண்ணா நகரில் அதே எஸ்பேங்கின் 1261வது கிளையைத் திறந்து வைத்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஒருவேளை குழப்படியும் குளறுபடியும் தீர்ந்து போயிருக்குமோ?