அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967 ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டு தோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2025-26) தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடுவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளிகளில் 6ஆம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று காலை 09.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி, சத்திரம்,இ.ஆர்.ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி ”ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம்” எனும் தலைப்பிலும், பேச்சுப்போட்டி ”1) அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, 2) கடமை, கண்ணியம், கட்டுபாடு  3)  தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு  4) இக்காலத்தில் ஆட்சிமொழி எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

Admission Enquiry Form

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகள் தொடர்பில் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0431-2401031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000ஃ-, இரண்டாம் பரிசு ரூ.7,000ஃ-, மூன்றாம் பரிசு ரூ.5,000ஃ-, என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன இப்போட்டிகளில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.