மதுபான மெத்தனால் விற்பனை நிறுவனங்களில் 3.75 லட்சம் லஞ்சம் வாங்கி கலால் அதிகாரி!
விருதுநகர் – மதுபான பார் மெத்தனால் விற்பனை நிறுவனங்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய கலால் அதிகாரி!
விருதுநகர் மாவட்ட கலால் துறை பிரிவில் துணை ஆணையராக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த

இவர் மீது தனியார் மதுபான பார், மற்றும் மெத்தனால் ரசாயனம், விற்பனை மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து மாதம் தோறும் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனை அடுத்து அவரைத் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேற்று சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் கலால் உதவி ஆணையாளர் கணேசன் அவரது சொந்த ஊர் திருச்சிக்கு தனியார் கார் மூலம் சென்று கொண்டிருந்தபோது,
விருதுநகர் சத்திர ரெட்டியப்பட்டி காவல் சோதனை சாவடி அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் சால்வன் துரை, பூமிநாதன், ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினர்,

வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணம் இருப்பதை உறுதி செய்து, பின்னர் அவரை அழைத்துக் கொண்டு புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கலால் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், லஞ்சமாக வாங்கிய ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கலால் உதவி ஆணையாளர் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
— மாரீஸ்வரன்.