கலெக்டர் முதல் கல்வி அலுவலர் வரை திருப்பத்தூரை வழிநடத்தும் “பெண் அதிகாரிகள்”!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைமை அதிகாரிகள் பொறுப்புகளில்  பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்”

சந்தன நகரில் பெண்களின் சாம்ராஜ்யம்

இனிய ரமலான் வாழ்த்துகள்

திருப்பத்தூர் மாவட்டத்தின் 5 வது புதிய ஆட்சியராகவும் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக  “சிவ சவுந்தரவள்ளி”  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் , அதே வகையில்  மாவட்டத்தின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளராக “ஸ்ரேயா குப்தா” அவர்கள் இருந்து வருகிறார்

திருப்பத்தூர் கலெக்டர். சிவ சவுந்திரவள்ளி
திருப்பத்தூர் கலெக்டர். சிவ சவுந்திரவள்ளி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஆண் ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரி என்ன பணி செய்கிறாரோ அதையே தான் பெண் அதிகாரிகளும் செய்கின்றார்கள். இருந்தாலும் மாவட்ட ஆட்சித் தலைவர்,  காவல் கண்காணிப்பாளர் . பெண்களாக  இருக்கும்போது மக்களின் எதிர்பார்ப்பும், அணுகும் விதமும் வேறுவிதமாக இருக்கும். முதியோர்கள் மனுகொடுக்க வரும்போது தங்களுடைய மகளாக நினைத்தும், பெண்கள் தங்களுடைய சகோதரிகளாக நினைத்தும் பேசுவார்கள்

இதன்மூலம் அவர்கள் திருப்பத்தூர் மக்களுடன் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்று உள்ளார்கள் , மாவட்ட ஆட்சியர் “சிவ சவுந்தரவள்ளி” மற்றும் காவல் கண்காணிப்பாளர் “ஸ்ரேயா குப்தா” ஆகியோரிடம் தங்களுடைய கோரிக்கைகளை நம்பிக்கையோடு  முன்வைக்க பொதுமக்கள் முன்வருவார்கள்.

காவல் கண்காணிப்பாளர் "ஸ்ரேயா குப்தா"
காவல் கண்காணிப்பாளர் “ஸ்ரேயா குப்தா”

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , காவல் துணை கண்காணிப்பாளர்,  மாவட்ட திட்ட இயக்குனர் , மாவட்ட சுகாதார துறை  இனை இயக்குனர் (PHC)  மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), திருப்பத்தூர் , வாணியம்பாடி நகராட்சிகளின் சேர்மன்கள்  .ஜோலார்பேட்டை , ஆலங்காயம் போன்ற  பேரூராட்சிகளின்  தலைவர்கள்,   தாலுக்கா . நகர  பெண் காவல் ஆய்வாளர்கள் என முக்கிய பொறுப்புகளில் 15-க்கும் மேற்பட்ட  பெண்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை நிர்வகித்து வருவது  வரவேற்கத்தக்க விஷயம் .

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திண்டுக்கல்லை சேர்ந்த “சந்திரலேகா”1971- ல் துணை ஆட்சியராக செங்கல்பட்டில் பணியைத் தொடங்கி 1980 -ல் தமிழகத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக (அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்திற்கு) நியமித்தார் எம்.ஜி.ஆர். தமிழகம் பார்த்த, பெண்களின் முதல் அதிகார பிரதிநிதி இவர்தான்.

அந்த வரிசையில், இரண்டு அல்லது மூன்று பெண்கள் மட்டுமே ஆங்காங்கே மாவட்ட ஆட்சித் தலைவர்களாக  தொடர்ந்தனர் “தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு”   பொறுப்பேற்ற பின் அதிக பெண்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி கிடைத்திருப்பதும், அதேபோல் உள்ளாட்சி நிர்வாகங்களில் 50% அளவிற்கு பெண்கள் இருந்து வருவதும். இவை  பெண்கள் மத்தியில் இந்த அரசு மீது ஆச்சரியத்தோடு  நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் சூ.உமாமகேஸ்வரிதிட்ட இயக்குநர்
டாக்டர் சூ.உமாமகேஸ்வரி திட்ட இயக்குநர்

தமிழ்நாட்டில் பல காலமாக, பதவி உயர்வு பெற்று ஐ.ஏ.எஸ் அந்தஸ்தை அடைபவர்களைத் தான் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டனர். நேரடியாக ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெயரளவில் ஒரு சிலருக்கு மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. குறிப்பாகப் பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்படவே இல்லை. ஆனால் இதுவெல்லாம் கடந்த ஓராண்டில் மாறி இருக்கிறது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக பெண்களே திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைமை அதிகார பொறுப்புகளை கைப்பற்றிருப்பது வரவேற்கத்தக்கதும்.  அதேசமயம், நிர்வாகப் பணியில் அவர்களுக்கு நிறைய கள அனுபவத்தைப் பெற்றுத் தரும்”  என்றார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

— மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.