அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அன்பா? கேவலமா? குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கும் ‘திருமணம் கடந்த உறவுகள்’!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சமூகத்தின் பாலியல் சம்பந்தமான பதிவுகளை எழுத கூடாது என நேற்று இரவு நினைத்திருந்தேன் அதற்காகவே திருந்தலாம் என நினைக்கிறேன் இன்று ஒரு பதிவு கூட போட்டுயிருந்தேன். ஆனால் எழுத வைத்துவிட்டது…

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி குன்கா வாசிக்கும்போது, உயர்பதவிகளில் இருப்பவர்கள் தனக்கு கீழ் பணிபுரியவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும், அப்போது தான் கீழ் இருப்பவர்கள் பயந்தும் சரியாகவும் வேலை பார்ப்பார்கள். தலைமை பதவியில் இருப்பவர்கள் தவறு செய்தால் கீழ் இருப்பவர்கள் அந்த தவறை அதைவிட அதிகமாக செய்வார்கள் என சொல்லி இருந்தார். வாய்ப்பிருப்பவர்கள் அந்த தீர்ப்பினை எடுத்துப் படியுங்கள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

முதலமைச்சர் ஜோசப்விஜய்யை நாம் தொடர்ச்சியாக விமர்சித்தது இதனால்தான். ஒரு நடிகையை சின்னவீடாக வைத்துக்கோண்டு வலம் வருவது, இந்த சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதலை தருகிறார். முதலமைச்சரே இப்படி இருக்கும்போது நாமளும் அப்படி இருக்கலாம் என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் நினைப்பார்கள் எனச்சொல்லி வருகிறேன். அதனை உறுதி செய்யும் வகையில் திருச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தனது காதல் மனைவி வேறொரு இளைஞனுடன் சொந்த வீட்டிலேயே திருமணம் கடந்த உறவில் இருப்பதை பார்த்துவிட்டு கணவன் கோபமாக கண்டிக்கிறார். மனைவியின் நடத்தையை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் தன் குழந்தையின் வாழ்க்கையை அழித்து விட்டதாகவும் தன் மகனிடம் கூறும் அந்த வீடியோவை காணும்போது உடலெல்லாம் பதறுகிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தினசரி செய்தித்தாள்களை எடுத்துப் பார்த்தால் தமிழ்நாட்டில் மூன்று நான்கு செய்திகளாவது இதுபோன்ற திருமணம் கடந்த உறவால் காவல்துறை பஞ்சாயத்து விவாகரத்து அடிதடி என காணமுடியும்.

HARINI JEWELLERS TRICHY

இந்த தவறைதான் நார்மல் செய்கிறார்கள். அந்த பெண் தவறு செய்து விட்டோம் என்கிற சிறிய குற்ற உணர்ச்சி கூட அவரின் முகத்தில் இல்லை, இதெல்லாம் எதுக்கு வீடியோ எடுக்கிற என சாதாரணமாக கேட்கிறார். அந்த கணவன் உளவியல் ரீதியாக எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு ஆத்திரத்தோடு நடந்து கொண்டிருக்க முடியும் என்பதை நினைக்கும் போது கவலையாகவே இருக்கிறது. இது ஏதோ தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இது போன்ற திருமணம் கடந்த உறவில் ஈடுபடுபவர்கள் மிக மோசமான மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

கேரளாவிலும் குழந்தையின் அம்மாவும் அவளுடைய கள்ளக்காதலனும் இணைந்து 17 இடங்களில் காயத்தை ஏற்படுத்தியதில் அந்த குழந்தை இறந்துள்ளது. அந்த புகைப்படம் கேரளாவை மட்டும் அல்ல பார்த்த ஒவ்வொருவரையும் பதற வைத்துள்ளது.

ச***** உறவு என்பது இங்கு அன்பு பாசம் என உருட்டுவார்கள் ச***** மனிதனுக்கு தேவைதான் ஆனால் அது ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு இல்லை, ஒரு குடும்பத்தை சின்னாபின்னமாக்கும் அளவுக்கு இருப்பது என்பது கேவலத்திற்கு உரியது.

தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தாரையும் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் சேர்த்து அழித்துவிடும். கணவன் அல்லது மனைவியின் துரோகத்தை ஏற்கமுடியவில்லை என்றால் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து இருக்கலாம்.

மனைவியின் தவறு கணவனின் கோபம் ஏதும் அறியா அந்த குழந்தையின் வாழ்க்கையை அழித்துள்ளது.

–  ராஜா ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.