அங்குசம் பார்வையில் ‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்படம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘சைகர்பிக்சர்ஸ்’ ராஜ்குமார் நாகராஜ், டைரக்‌ஷன் : ராஜவேல் கிருஷ்ணா. நடிகர்-நடிகைகள் : ரச்சிதா மகாலட்சுமி, ராஜ்குமார் நாகராஜ், அபிநட்சத்திரா, அனந்த் நாக், அம்ரிதா ஹால்டர், ராஜேஸ்வரி ராஜி, சரிதா, பரோட்டா முருகேசன், ராஜசேகர், ஜெயராஜ் ஜெயா, ஓட்டேரி சிவா, தனசேகர். சந்திரமெளலி. ஒளிப்பதிவு : டி.ஜெ.பாலா, இசை : ஆர்.எஸ்.ராஜ்பிரதீப், எடிட்டிங் : ராம்கோபி, பி.ஆர்.ஓ. : புவன் செல்வராஜ்.

உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் சில வீடுகளில் வேலைபார்க்கிறார் அபிநட்சத்திராவின் அம்மா. அதில் ஒரு வீடு அம்ரிதா ஹால்டரின் வீடு.  அம்மா வேலைக்குப் போக முடியாத நாட்களில்  அங்கே போய் வீட்டு வேலை செய்வார் அபிநட்சத்திரா. ஏழையான அபிக்கு மனிதாபிமானத்துடன் உதவுகிறார் அம்ரிதா.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

அபிநட்சத்திரா
அபிநட்சத்திரா

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீட்டின் மேல்மாடி கான்கிரீட் சுவருக்குள் ஒரு பெண் புதைக்கப்பட்டுக் கிடக்கிறாள். இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் [ ராஜ்குமார் நாகராஜ் ] விசாரணையில் இறங்கிய பின் தான் தெரிகிறது, அது அபிநட்சத்திரா என்று. இந்த விசாரணையில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ருதி [ ரச்சிதா மகாலட்சுமி ]யும் இணைந்து கொள்கிறார். அபிநட்சத்திராவைக் கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதற்கான விடை தான் இந்த ‘எக்ஸ்ட்ரீம்’ க்ளைமாக்ஸ்.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

அம்ரிதா ஹால்டர்
அம்ரிதா ஹால்டர்

படத்தின் இடைவேளை வரை’தேமே’ என போகிறது திரைக்கதையும் காட்சி அமைப்புகளும். இடைவேளைக்குப் பின்பு கூட சுதாரித்து திரைக்கதைய சுவாரஸ்யமாக்கத் தவறிவிட்டார் டைரக்டர் ராஜவேல் கிருஷ்ணா. இதனால் சீன்கள் எல்லாமே எந்தவித கண்டினியூட்டி இல்லாமல் துண்டுதுண்டாக வந்து போகின்றன. இது எடிட்டரின் கோளாறா? ஸ்கிரிப்பிட்டின் கோளாறா? என நமக்குத் தெரியவில்லை.

ராஜ்குமார் நாகராஜ்
ராஜ்குமார் நாகராஜ்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்ஸ்பெக்டர் சத்தியசீலனாக தயாரிப்பாளர் ராஜ்குமார் நாகராஜ், போலீஸ் கெட்டப்பில் விறைப்பும் முறைப்புமாக ஓரளவு ‘மேட்ச்’சாகியிருக்கார். ஆனா நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருப்பது திரையில் நன்றாகவே தெரிகிறது.

ரச்சிதா மகாலட்சுமி
ரச்சிதா மகாலட்சுமி

அதை பேலன்ஸ் பண்ணும்விதமாக இந்த வயதிலும் [ 45+] போலீஸ் யூனிஃபார்மிலும் கலர் டிரஸ்ஸிலும் சும்மா ஜிவ்வுன்னு இருக்கார் ரச்சிதா மகாலட்சுமி. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜின் ஃப்ளாஷ்பேக்கும் அதையொட்டி அவர் காட்டும் ஆக்ரோஷ ரியாக்‌ஷனும் அபத்தமாகவே தெரிகிறது.  அபிநட்சத்திராவும் நல்ல நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கார்.

அனந்த்நாக்கின் லவ்வராக வரும் அம்ரிதா ஹால்டர், ஜிகுஜிகுவென மேக்கப்பும் குளுகுளுவென இத்துணூண்டு காஸ்ட்யூமும் போட்டு வருகிறாரே தவிர, நடிப்புன்னா என்னங்கன்னு கேட்கிறார். ஒளிப்பதிவும் இசையும் எக்ஸ்ட்ரீமுக்கு ஓரளவு கைகொடுத்துள்ளன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத விதத்தில் இருந்தாலும் அதற்கு முந்தைய ஒன்றைரை மணி நேரத்தை டெம்ப்டேஷனாக கொண்டு போக தவறிவிட்டார் டைரக்டர் ராஜவேல் கிருஷ்ணா.

நீங்கள் ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகனாக இருந்தால் இந்த ‘எக்ஸ்ட்ரீம்’ ஐ பார்த்து ரசிக்கலாம்.

 

   —  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.