ராமஜெயம் கொலை வழக்கு உண்மை கண்டறியும் சோதனை – ராமஜெயம் குடும்பத்தினர் மீதும் நடத்த வேண்டும் ரவுடிகள் வக்கீல் பகீர் புகார் ! வீடியோ !

0

 

ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இதில் 

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

தமிழகத்தின் பிரபல ரவுடிகளில் 12 பேர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ்,  தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகியோர் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு அனுமதிகேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் சிபிசிஐடி டி.எஸ்.பி, இதை அடுத்து  12 பேரும்  01.11.2022 அன்று  சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உத்தரவிடப்பட்டுள்ளது.  இதை அடுத்து இன்று திருச்சி நீதிமன்றத்தில் 12 பேரும், அவர் அவர் வழக்கறிஞர்கள் உடன் ஆஜர் ஆனார்கள்… கூடுதலாக லெப்டு செந்தில் என்பவர் 13வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார். இவர் கடலூர் சிறையில் இருப்பதால் அங்கிருந்து அழைத்து வரப்பட்டார்…

வீடியோ விங்.. 

கே.என்நேருவுடன் – கே.என்.ராமஜெயம்

அதற்குள்ளாக விசாரணை துவங்கியது, விசாரணை குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ்

 

ராமஜெயம் வழக்கு சம்மந்தமா உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி. சார்பில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதன் அடிப்படையில் அனைவரும் இன்று  01.11.2022  ஆஜர் ஆனார்கள்.

வீடியோ விங்.. 

எங்கள் தரப்பில் நாங்கள், ராமஜெயம் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புலனாய்வு அதிகாரியாக எஸ்.பி.யை தான் சொல்லி இருக்கு, ஆனால் இங்கே டி.எஸ்.பி மனு தாக்கல் செய்து இருக்கிறார்.  இந்த வழக்கில் எஸ்.பி தான் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தோம்.

 

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

சந்தேகப்பட்டியலில் 12 பேர் சொல்லியிருக்கிறார்கள்.  இதுல இறந்து போன ராமஜெயத்தின் குடும்பத்தினர் யாருமே கிடையாது. டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளில் ராமஜெயம் குடும்பத்தினர் வாக்குமூலங்களை மாற்றி மாற்றி சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இதே மாதிரி தான் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். 

வீடியோ லிங்

மோகன்ராம் குரூப்
மோகன்ராம் குரூப்

இந்த சந்தேக பட்டியலில் இறந்துபோனவரின் மனைவி, அவருடைய அண்ணன், நடிகர் நெப்போலியன் மனைவி, அவுங்க யாரும்,  இந்த லிஸ்டில் இல்லை,  இந்த லிஸ்ட் ஏன் லீக் பண்ணினாங்கன்னு தெரியல்ல, சம்மந்தமே இல்லாத லிஸ்டா இருக்கு, ராமஜெயம் குடும்பத்தினர் யாருமே இந்த பட்டியலில் இல்லை என்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர்களையும் சேர்க்க வேண்டும்.

 

இந்த வழக்கை 6 வருடம் சி.பி.சி.ஐ.டி தான் நடத்தியது, அதன் ராமஜெயம் மனைவி லதா கொடுத்த மனுவின் மூலம்  சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இப்போதும் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு எப்படி பட்டியல் தயார் படுத்தினார்கள், பழைய விசாரணையில் உள்ள யாரையும் இந்த பட்டியலில் கொண்டு வரவில்லை,  இது உண்மை அறியும் சோதனைக்கு டாக்டரும், வழக்கறிஞரும் இருக்க வேண்டும் என்று இருக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம்.  சோதனைக்கு ஒத்தழைக்க தயாராக இருக்கிறோம்.

கைது செய்யப்பட்ட போது..

வீடியோ லிங்

அதே நேரத்தில் இந்த சந்தேகபட்டியில் சரியில்லை என்பதையும் பதிவு செய்து இருக்கிறோம். சி.பி.ஐ.டி கொடுத்த மனு சரியாக இல்லை என்பதால் மீண்டும் பதிவு பண்ண சொல்லியிருக்கிறோம், 12 பேர் பட்டியல் தயார் செய்து இருப்பதே ஒரு அரசியல் காரணம் தான். எங்கள் கட்சிகார்ர்கள் எல்லோரும் மிக சாதரணமானவர்கள், பணம் படைத்தவர்கள் இல்லை,  இவர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கும் பொய்யாக போட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக குடும்பத்தினர் அனைவரும், ராமஜெயத்திற்கு குடி பழக்கம் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் போஸ்ட்மார்டம் ரிப்போட்டில் மது இருந்த்தாக அறிக்கை உள்ளது

வழக்கை வரும் 07.11.2022 அன்றைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.