கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு – பிரபல ரவுடி கும்பல் !
கே.என்.ராமஜெயம் கொலைவழக்கு விசாரணை – பிரபல ரவுடி கும்பல் !
தமிழக போலீஸை கலங்கவிட்டவன் மெட்ராஸ் பாண்டி. என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்த பிறகு, அந்த டீமுக்கு தலைவரானார் திண்டுக்கல் மோகன்ராம். தன்னோட குரு மெட்ராஸ் பாண்டியின் கொலைக்கு காரணமானவனை திண்டுக்கல் சப் ஜெயில் வாசல்லேயே நெத்திப் பொட்டுல சுட்டு மோகன் வீழ்த்தி தமிழக போலிசுக்கு அதிர்ச்சியை கொடுத்தான்.
மோகன் ராம் மீது கொள்ளை, கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில், 10 கொலை வழக்குகள் அடங்கும். திண்டுக்கல்லில் 4 கொலை வழக்குகளும், தமிழகத்தின் பிற போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும் உள்ளன.
கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரை கொன்ற வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கோவை போலீசார் அவரை தேடினர். இதற்கிடையே மும்பையில் பதுங்கி இருந்த மோகன்ராமை போலீசார் கைது செய்தன.
மோகன்ராமின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தவர் கணேசன் என்ற நரைமுடி கணேசன். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன., திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் நரைமுடி கணேசன் கைது செய்யப்பட்டார்.
தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே இருந்தனர். இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு சமந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள ரவுடி கும்பலை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் குரூப்பை சேர்ந்த திண்டுக்கல் கணேசன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மாப்பிள்ளை செந்தில் ஆகியோரை விசாரித்து கொண்டு இருக்கிறனர்.
இது குறித்து திண்டுக்கல் மோகன்ராம் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசிய போது…
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு கூட்டிச்செல்லப்பட்ட (கைது செய்யப்பட்ட) திண்டுக்கல் கணேசன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மாப்பிள்ளை செந்தில் ஆகியோரை 4 நாட்களாக சட்டவிரோதமாக திருச்சி திருவெம்பூர் காவலில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது செந்தில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
அவரது மனைவி ஜென்சியிடம் 50 லட்சம் பணம் தருகிறோம் உன்கணவரை ஒத்துக்கொள்ளச்சொல் என்று கூறி காவல்துணை மிரட்டி வருகின்றனர். காவல்துறையினர் மனிதாபிமானமற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
அடுத்தடுத்த சில நாட்களில் ராமஜெயம் கொலைவழக்கு பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.