குளித்தலை மாணவன் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி -தூக்கிட்டு தற்கொலை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலை அருகே திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, மலைப்பட்டியைச் சேர்ந்த வீரமணி மல்லிகா தம்பதியரின் மகன் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவன் சிவா வயது 15. நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, மலைப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் வீரமணி மல்லிகா தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான சிவா வயது 15. இவர் அருகிலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிவா தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த சிவா தனது வீட்டின் அருகே இருந்த சமையல் அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தாய் மல்லிகா கூலி வேலைக்கு சென்று இருந்தார். சம்பவத்தைப் பார்த்த எட்டாம் வகுப்பு படிக்கும் இறந்து போன சிவாவின் தம்பி மருதை பாண்டி வயது 13.கதறி அழுது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த கூலி வேலைக்கு சென்று இருந்த தாய் மல்லிகா மற்றும் உறவினர்கள் சம்பவம் குறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த மாயனூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவாவின் இறப்பு அந்த பகுதியில் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-நௌஷாத் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.