திருச்சி மாநகராட்சி வார்டு 23-ல் ரவுண்ட்அப் ! நம்ம கவுன்சிலரு வார்டுக்கு என்ன தான் செஞ்சாரு?

0

திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவுபெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்டப்பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய அங்குசம் செய்தி குழு திட்டமிட்டது. இதன்படி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷிடம் அவரது பணிகள் குறித்து கேட்டபோது…

திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உறையூர் குறத்தெரு பகுதியில் ரூ.25லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம், தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடம், புத்தூர் மதுரை வீராசாமி, பாத்திமா தெரு, உறையூர் காசிசெட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.28 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால், கான்கீரிட் தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. புத்தூர் விசுவப்பநாயக்கர் பேட்டை முதல் உறையூர் குறத்தெரு வரையில் ரூ.53 லட்சம் மதிப்பில் தார் தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

 

நலவாழ்வு மைய கட்டிடம் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. புத்தூர் ஆப்பக்காரத்தெருவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையத்தில் 56.20 லட்சம் மதிப் பில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெறுகிறது. காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், கூடுதல் படுக்கை வசதிகள், ரூ.90 லட்சம் மதிப்பில் பொதுநிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உறையூர் பாளையம் பஜார் பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் தார்தளம் மேம்படுத்தும் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் காந்திபுரம் வடக்கு தெருவில், ரூ.21 லட்சம் மதிப்பில் கான்கீரிட் சாலை அமைக்கப்பட உள்ளது. காசி செட்டிதெரு, செட்டிப்பேட்டை தெரு பகுதிகளில் மின்மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம், வெள்ளாளர் தெருவில் பழுதடைந்த குறுக்குபாலம் சீரமைத்தது, வாணியச்செட்டி தெருவில் மழைநீர் வடிகால் மராமத்து பணி உட்பட கடந்த ஓராண்டில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும், வரும் ஆண்டுகளில் 23 வது வார்டின் அனைத்து பகுதிகளிலும், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

வார்டு பகுதியில் உள்ள கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு அரசே குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கி தவணைமுறையில் பணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன். நிலத்தடி நீர்மட்டம் உயர்வு : காந்திபுரம் காசி விஸ்வநாதர் கோவில் குளமம் தொடர்ந்து இந்தாண்டும் தூர்வாரப் பட உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் தக்கவைக்கப்பட்டு சுற்றப்புற பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

உடனுக்குடன் தீர்வு : அனைத்து பகுதிகளிலும் கவுன்சிலர் செல்எண்ணுடன் பெயர் பலகை எழுதப்பட்டு வார்டு மக்கள் தொடர்பு கொள்ளவும், வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன். கண்ட றியும் குறைகளை உடனே சரிசெய்கிறேன் என்றார்.


1975ல் தொடங்கிய அரசியல் பயணம்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றில் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்புக்குப் பின் தற்போது திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.