அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோவில்பட்டி – பல்லாயிரக்கணக்கில் பயிர்களை சேதபடுத்திய காட்டுப்பன்றிகள் ! விவசாயிகள் வேதனை ! தமிழக அரசுக்கு கோரிக்கை

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் 90% மானாவாரி விவசாய நிலங்கள்  பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.  எனவே காட்டு பன்றியால் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் விலங்குகளை பிடிக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியும் தொடர்ச்சியாக விவசாயிகளும் விவசாய சங்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தூத்துக்குடி-  விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நவதானியங்கள், மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் வத்தல் மல்லி உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது எட்டயபுரம்  அருகே உள்ள  கிராமங்களிலும் ராபி பருவத்தில் மக்காச்சோளம் உளுந்து, பாசி, நிலக்கடலை, சூரியகாந்தி  உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ள  நிலையில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் முற்றிலும் நாசம் செய்து  இப்பகுதி விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழகத்தைப்போன்று  இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற காட்டுப்பன்றிகள், மான்கள், யானைகள் தொல்லையால் விவசாயிகள் அவதியுற்ற போது, அந்த மாநில அரசுகள் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்றுவதற்காக உடனடியாக விலங்குகளை பிடிக்க பெரும் முயற்சி எடுத்தனா் ஆனால்,  தமிழகத்தைச் சேர்ந்த இப்பகுதி விவசாயிகளை மட்டும் பலமுறை முறையிட்டும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக விவசாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே தமிழக அரசு இப்பிரச்சனை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளார்

 

— மணிவண்ணன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.