அங்குசம் சேனலில் இணைய

பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா – பணி நீக்கமா ? ராஜினமாவா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா – பணி நீக்கம் !

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஷர்மினா தினமும் யாரேனும் யூடியூபர்கள் கொண்டு வீடியோ எடுத்து விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருவது குறித்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.  இந்த நிலையில் கனிமொழி பேருந்துக்கு வந்த விவகாரத்தை பஸ் உரிமையாளரிடம்  தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறித்து  விசாரித்த போது நடந்த  பிரச்சனையில் உரிமையாளர் உங்க பெண்ணை அழைத்துக்கொண்டு போங்க என்று சொல்லியிருக்கிறார்… இதனால்  நான் வேலையில் இருந்து விலகி கொண்டே என்று பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்..  இந்த நிலையில் பஸ் உரிமையாளர் தரப்பில் நான் நீக்கம் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்…

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த நிலையில் இன்று  தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில்  திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கோவை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனம் ஓட்டுனர் ஷர்மிளாவை நேரடியாக சந்தித்து வந்தது குறிப்பிடதக்கது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.