‘அன்பில் அவன்’ எப்படிப்பட்டவன்?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஐங்கரன் இன்டர்நேஷனல் & ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில்  கே. கருணா மூர்த்தி-  அசோக் செல்வன் – அபிநயா செல்வம்-  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அன்பில் அவன்’. வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் & ஃபர்ஸ்ட் லுக் நேற்று ( ஆக.12)சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நிகழ்ச்சியில் பேசியவர்கள்…

தயாரிப்பாளர் அபிநயா செல்வம்

“இந்தப் படத்தின் அனைத்து பணிகளை யும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இன்று முதல் இப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து இருக்கிறோம்.

‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து நல்லதொரு படைப்பாக ரசிகர்களிடம் சமர்ப்பிக்கிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்”.

அபிநயா செல்வம்
அபிநயா செல்வம்

இயக்குநர் ஆர். கார்த்திகேயன்

“அன்பில் அவன் – கனவைப் பற்றி பேசும் படம். அதிலும் பெண்களின் கனவு -அதற்கான துரத்தல்- அதற்கான மெனக்கடல்- போராட்டம்- சவால்கள்-  ஆகியவற்றை பற்றி உணர்வுபூர்வமாகவும், காதலுடனும் பேசுகிறது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு பெண்களும் தனக்கான பாய் பிரண்ட்-  ஹஸ்பண்ட் – இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்வார்கள் என நான் நம்புகிறேன்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ப்ரீத்தி முகுந்தன்

“இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்… திருமணமான பெண்களுக்கும்… பிடிக்கும்”

ப்ரீத்தி முகுந்தன் & அசோக் செல்வன்
ப்ரீத்தி முகுந்தன் & அசோக் செல்வன்

அசோக் செல்வன்

“எனது ‘ப்ளூ ஸ்டார்’ படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது.

சில நேரங்களில் சில படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம்  அனுமதிக்கத்தான் வேண்டும்.

இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே… அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்… நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்.‌

அன்பில் அவன் – காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன்.

காதல் – புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது”.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.