அங்குசம் பார்வையில் ‘ஃபைண்டர்’ படம் எப்படி இருக்கு !

சார்லி வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்த பின், அரசு வக்கீலாக செம கெத்தாக நிழல்கள் ரவி கோர்ட்டுக்குள் வரும் சீன் செமத்தியான சீன்.....

0

அங்குசம் பார்வையில் ‘ஃபைண்டர்’ படம் எப்படி இருக்கு !  தயாரிப்பு: ‘ஆரபி புரொடக்‌ஷன்ஸ்’ & விஜயன் வென்சர்ஸ்’ ரஜீவ் சுப்பிரமணியம், வினோத் ராஜேந்திரன். டைரக்‌ஷன்: வினோத் ராஜேந்திரன். நடிகர்—நடிகைகள்: சார்லி, சென்ராயன், நிழல்கள் ரவி, வினோத் ராஜேந்திரன், தாரணி, பிரணா, நாசர் அலி, கோபிநாத் சங்கர். இசை: சூர்ய பிரசாத், ஒளிப்பதிவு: பாபு ஆண்டனி, எடிட்டிங்; தமிழ் குமரன், ஆர்ட் டைரக்டர்: அஜய் சம்பந்தம். பி.ஆர்.ஓ. ஏ.ராஜா [ சுல்தான் ராஜா ]

சென்னை அருகே இருக்கும் பழவேற்காடு கடற்கரை மீனவர் குப்பம் தான் கதைக்களம். மீன் பிடித்தொழிலுடன் சென்னையில் உள்ள சிட்பண்ட் கம்பெனிக்கு உள்ளூரில் சீட்டுப் பிடிக்கும் வேலையை செய்கிறார் பீட்டரும்( சார்லி), அவரது மகள் ரூபியும்( பிரணா ). சிட்பண்ட் கம்பெனி சீட்டிங் போட்டுவிட, ஊர்மக்கள் மொத்தமாக சேர்ந்து சார்பிலியின் கழுத்தைப் பிடிக்கிறார்கள். சார்லியின் மாப்பிள்ளையான சென்ராயன் ஒரு ஐடியா சொல்கிறார். அதாவது சென்னை வேளச்சேரியில் நடந்த ஒரு கவுன்சிலர் கொலையில் கோர்ட்டில் சரண்டரானால் அஞ்சு லட்சம் கிடைக்கும். ஆறு மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்துரலாம். இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க இதான் ஒரே வழி என்கிறார் சென்ராயன்.

வேறு வழியே இல்லாததால் மனைவி, மகளிடம் சொல்லிவிட்டே கொலைக்கேசில் சரண்டராகிறார் சார்லி. ஆனால் எட்டு வருடங்களாகியும் அவரால் வெளியே வரமுடியவில்லை. கடன் தொல்லையால் அம்மாவும் தற்கொலை செய்து கொள்ள, அப்பாவை மீட்க சட்டப் போராட்டம் நடத்துகிறார் பிரணா. இவரின் இந்தப் போராட்டத்திற்கு துணிந்து துணை நிற்கிறது ‘ஃபைண்டர்’ என்ற டிடெக்டிவ் ஏஜென்ஸி. சட்டப் போராட்டம் சக்சஸில் முடிந்ததா? சார்லி ஜெயிலிலிருந்து ரிலீசானாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ஃபைண்டர்’ என்ற அருமையான க்ரைம் த்ரில்லர் சினிமா.

அமெரிக்காவில் இரண்டு வக்கீல்கள் இணைந்து, பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை வாங்கித் தந்து, அவர்களுக்கு அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையையும் வாங்கித் தரும் சீரிய பணியைச் செய்திருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்துத் தான் இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதாக படத்தின் ஆரம்பத்திலேயே டைரக்டர் வினோத் ராஜேந்திரன் சொல்லிவிடுவதால், படத்தின் மீது நமக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது.

- Advertisement -

- Advertisement -

finder Movie
finder Movie

அதே போல் எம்.ஏ.கிரிமினாலஜி படிக்கும் மாணவர்களிடம் அரசு வக்கீலான தயாளன் ( நிழல்கள் ரவி) மோட்டிவேட் ஸ்பீச் கொடுப்பது தான் படத்தின் முதல் சீன். அதில் ரவி பேசும் போது, “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது” என்பது தான் காலங்காலமாக சட்டம் நமக்கு சொல்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, “ஆயிரம் குற்றவாளிகளும் தப்பிக்கக்கூடாது, ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது” என ரவி பேசும் டயலாக் தான் படத்தின் ஸ்ட்ராங்கான கதைக்கட்டமைப்பு, அதற்கேற்ற த்ரில்லிங்கான திரைக்கதையமைப்புக்கு அஸ்திவாரம்.

4 bismi svs

நிழல்கள் ரவியின் இந்த ஸ்பீச் தான், டைரக்டர் & ஹீரோ வினோத் ராஜேந்திரனுக்கு ‘ஃபைண்டர்’ என்ற டிடெக்டிவ் ஏஜென்ஸியை தொடங்க உந்து சக்தியாக இருக்கிறது. வினோத்துக்குத் துணையாக ஹீரோயின் தாரணியும் அவரது நண்பரும் களம் இறங்குகிறார்கள். “எப்படியாவது எங்கப்பாவைக் காப்பாத்துங்க சார்” என கண்ணீர்மல்க ‘ஃபைண்டரி’டம் வருகிறார் சார்லியின் மகள் பிரணா.

படத்தில் மொத்தமே சார்லிக்கு பத்து சீன்கள் தான் என்றாலும் படத்தின் உயிரோட்டமே அவர் தான். இவருக்கு அடுத்த இடம் சென்ராயனுக்கு. ஆனால் நடிப்பில் பரிதாபத்தை அள்ளி, படம் முழுக்க வியாபித்திருக்கிறார் பிரணா. வினோத் ராஜேந்திரனும் தாரணியும் சார்லியின் வழக்கை கரெக்டாக ஸ்மெல் பண்ணி துப்புத்துலக்கும் ஸ்டைல் அலட்டல் இல்லாத அளவான, நிறைவான நடிப்பு.

சார்லி வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்த பின், அரசு வக்கீலாக செம கெத்தாக நிழல்கள் ரவி கோர்ட்டுக்குள் வரும் சீன் செமத்தியான சீன். அந்த சீனில் மட்டுமல்ல, எல்லா சீன்களிலும் தனது பின்னணி இசையாலும் க்ளைமாக்ஸ் செண்டிமெண்ட் பாட்டிலும் அசத்திவிட்டார் மியூசிக் டைரக்டர் சூர்ய பிரசாத். ஒரே ஃப்ளாஷ்பேக் பல இடங்களிலும் வந்தாலும் அதை வெவ்வேறு ஆங்கிளில் கட் பண்ணி, பேஸ்ட் பண்ணி வித்தை காட்டியிருக்கிறார் எடிட்டர் தமிழ் குமரன்.

வில்லன் பீமாவாக வரும் நாசர் அலியும் ஸ்கிரீனில் அவரது லுக்கும் நன்றாகவே உள்ளது. அதிலும் அந்த குண்டு சாமியாரை, “டேய்…” என அதட்டலாக நாசர் கூப்பிடுவது தனி ஸ்டைல். கடின முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் நாசருக்கு.

சில சீன்களில் பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டு தென்படுவதைப் பார்த்தால், பாவம்.. படத்தை எடுத்து முடித்து பல ஆண்டுகளாக  ரிலீஸ் பண்ண பெரும்பாடு பட்டிருப்பார்கள் போல. எனவே மக்களே… முற்றிலும் புதியவர்களின் இந்த மாதிரியான நல்ல முயற்சி, கடின உழைப்பு இவற்றில் குற்றமும் குறையும் கண்டுபிடித்து  எழுதாமல் இருப்பதே நல்ல விமர்சகனுக்கு அழகு.

-மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.