வண்டிகளின் பேன்ஸி நம்பர் கட்டணம் அம்மாடியோ இவ்வளவா ?
இதில் பேன்ஸி நம்பரை அடையாளம் காண நீங்கள் தேர்வு செய்த சிரீஸை செலெக்ட் செய்தால் கீழ் டேபிள் வரும் அதில் உள்ள சிவப்பு நிற எண்கள் பேன்ஸி
உங்கள் வண்டியின் பேன்ஸி நம்பர் கட்டணம் அம்மாடியோ இவ்வளவா ? பைக்குகளை வாங்குவது ஒரு கனவாக இருந்தாலும் அதற்கு பிடித்த எண்களை வாங்குவது ஒரு சிலருக்கு மட்டுமே கனவாக இருக்கும். இதை Fancy நம்பர் என்று கூறுவார்கள் தங்கள் பிறந்த தேதி, தனது பெற்றோர் பிறந்த தேதி, தங்களால் மறக்க முடியாத தேதி, போன் நம்பரின் எண்கள், காதலிக்கு பிடித்த எண்கள், அல்லது வரிசையாக இருக்கும் எண்கள் என பலவற்றை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவர். இவ்வாறு அவர்கள் விலைகொடுத்து வாங்கும் எண்கள் அவர்களுக்கு எளிதில் ஞாபகமிருக்கும் வகையில் இருக்கிறது. இதுபோன்ற Fancy நம்பர் வாங்க வேண்டும் என்பதும் சிலரது கனவாகவே இருக்கும்
தமிழகத்தில் ஃபேன்ஸி நம்பர்களுக்கான கட்டணமாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது. எந்தெந்த வகையான ஃபேன்ஸி நம்பர்களுக்கு என்ன கட்டணம்? நீங்கள் விரும்பும் நம்பர் தற்போது கிடைக்குமா? தெளிவாக காணலாம் வாருங்கள்
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் வாகனங்களைக் கட்டாயம் பதிவு செய்து தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இப்படியாக வாகனங்களைப் பதிவு செய்வதற்கு மாநில அரசுகள் போக்குவரத்துத் துறை அலுவலகங்களை வைத்திருக்கிறது. அந்த அலுவலகங்களில் தான் வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு வாகனத்தை வாங்கினால் அந்த டீலர்களே நேரடியாக வாகனத்தைப் பதிவு செய்து வழங்கிவிடுவார்கள்.
இப்படியாகப் பதிவு செய்யும் போது பலர் தங்களுக்குப் பிடித்த எண்ணைப் பதிவெண்ணாக வாங்க விரும்புவார்கள், சிலர் பேன்ஸி எண்ணைவாங்க விரும்புவார்கள். இவர்களுக்கு அவர்கள் விரும்பும் எண்ணை அதற்கான கட்டணத்தைச் செலுத்தி வாங்க முடியும் எந்தெந்த நம்பருக்கு எவ்வளவு என்ற விபரங்களை விரிவாகக் காணலாம்.
தற்போது நீங்கள் வாகனத்தை பதிவு செய்யும் ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்கப்பட்டு வரும் நம்பர் சிரீஸில் 1000 நம்பர்களுக்கு உட்பட்ட நம்பராக இருந்தால் இதை நீங்கள் விரும்பிய நம்பராகத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் அந்த நம்பர் தமிழக அரசின் ஃபேன்ஸி நம்பர் பட்டியலில் இல்லாமல் இருக்க வேண்டும்.
அப்படியாக நீங்கள் விரும்பிய நம்பரை வாங்க 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ரூ2 ஆயிரம் கட்டணமும், ரூ4 லட்சத்திற்குக் குறைவான 4 வீலர்களுக்கு ரூ10 ஆயிரம் கட்டணமும், ரூ4 லட்சத்திற்கு அதிகமான வாகனங்களுக்கு ரூ16 ஆயிரமும் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் வழக்கமான பதிவு கட்டணத்துடன் சேர்த்துக் கூடுதலாக வசூலிக்கப்படும்.
இது போகத் தமிழக அரசு அட்வான்ஸ்டு நம்பர்கள் என ஒவ்வொரு சிரீயஸ்களிலும் குறிப்பிட்ட நம்பர்களை மார்க் செய்து வைத்துள்ளது. இந்த நம்பர்களை வாங்க அதிக கட்டணம் செலுத்த வேண்டும். தமிழக போக்குவரத்துக் கழக வெப்சைட்டின்படி இதை 4 வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி 4 சிரீஸ் வரை ரூ40 ஆயிரமும், 5-8 சிரீஸ் வரை ரூ60 ஆயிரம் கட்டணமும், 9 மற்றும் 10வது சிரீஸிற்கு ரூ 1 லட்சம் கட்டணமும், 11 மற்றும் 12வது சிரீஸ்களுக்கு ரூ2 லட்சம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் இரண்டு தான் ஒன்று வாகனம் விற்பனை செய்ததற்கான ஃபார்ம் 21 சான்றிதழ் மற்றும் நம்பரைக் கோருவதற்கான கடிதம், இவை இருந்தாலே இந்த நம்பரை வாங்கிவிடலாம்.
நீங்கள் விரும்பிய நம்பர் தற்போது மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு வழங்கப்படும். இதை நீங்கள் ஆன்லைனில் தேடி உங்களுக்குப் பிடித்த நம்பர் கிடைக்குமா என்பதை செக் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பரிவாகன் தளத்தில் இதற்கான பிரத்தியேகமான தேடுதல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
https://vahan.parivahan.gov.in/fancy/faces/public/availableAllNumbers.xhtml
என்ற லிங்கில் சென்று உங்களுக்கு விரும்பிய எண் நீங்கள் பதிவு செய்யும் ஆர்டிஓவில் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளலாம். அதற்காக நீங்கள் உங்கள் க்ரோம் பரவுசரில் இந்த லிங்கை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அதில் ஆர்டிஓவை தேர்வு செய்த நம்பரை பதிவு செய்து செக் செய்து கொள்ளலாம்.
அடுத்தாக நீங்கள் தேர்வு செய்த நம்பர் எந்த சிரீஸ் அதாவது TN உங்கள் ஆர்டிஓ நம்பர் அதன் பின் வரும் சீரீஸில் இருக்கிறது என்பதை செக் செய்து கொள்ளுங்கள். அதிலிருந்தால் சிரீஸின் வரிசை எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு அதே தளத்தில் User Other Services என்ற மெனு ஆப்ஷனில் All Available Numbers என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதில் மாநிலம், ஆர்டிஓ ஆகியவற்றை செலக்ட் செய்யவேண்டும்.
அடுத்து வாகன சீரீஸை தேர்வு செய்யும் டிராப்டவுனை தேர்வு செய்தால் அதில் தற்போது இருக்கும் சிரீஸ் எல்லாம் வரிசைப் படுத்தப்பட்டிருக்கும். அதில் நீங்கள் முன்னர் தேடிய நம்பரின் சிரீஸ் அருகே பிராக்கெட்டிற்குள் (1), என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை இதில் உள்ள எண் தான் வரிசை எண் இந்த வரிசை எண்ணிற்கு ஏற்றபடி தான் மேலே சொன்னது போல ஃபேன்ஸி நம்பருக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
இதில் பேன்ஸி நம்பரை அடையாளம் காண நீங்கள் தேர்வு செய்த சிரீஸை செலெக்ட் செய்தால் கீழ் டேபிள் வரும் அதில் உள்ள சிவப்பு நிற எண்கள் பேன்ஸி எண்களாகவும், பச்சை நிற எண்கள் சாதாரண எண்களாகவும் கருதப்படுகிறது. தமிழக அரசு ஒவ்வொரு சிரீஸிலும் 100 போன்ஸி எண்களை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடிகளில் ஏலம் போன வாகன எண்
சமீபத்தில் ஃபேன்ஸி நம்பர் ஏலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்தது பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் HP-99-9999 என்ற Fancy எண்ணை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டது. இந்த எண் மிகவும் Fancy என்பதால் இதற்கு போட்டிகள் அதிகாமாக காணப்பட்டது. வெறும் 1000 ரூபாயில் தொடங்கிய இந்த ஏலம், பல ஆயிரத்தை கடந்து, லட்சத்தை கடந்து கோடியில் வந்தது. சுமார் 3 பேர் இந்த எண்ணுக்காக ஒரு கோடிக்கு மேல் ஏலத்தில் விலை பேசினர். இதில் ரூ. 1,12,15,500 (1.12 கோடி) கோடிக்கு தேஷ்ராஜ் என்பவர் தனது ஸ்கூட்டிக்காக இந்த நம்பரை ஏலம் எடுத்துள்ளார். இவரது ஸ்கூட்டியில் விலை 90 ஆயிரம் மட்டுமே ஆனால் வாகனத்துக்காக ஏலத்தில் எடுத்த நம்பரின் விலை ரூ.1.12 கோடி. , 90 ஆயிரம் ஸ்கூட்டிக்கு ரூ.1.12 கோடி கொடுத்து fancy எண் ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் இதுவே நாட்டில் முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் இப்படியான வாகன ஃபேன்ஸி பதிவெண்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்த வசதியைத் தமிழக போக்குவரத்துத் துறையும் கொண்டு வர வேண்டும். இதைக் கொண்டுவந்துவிட்டால் பேன்ஸி எண்கள் குறித்த ஒளிவு மறைவற்ற தகவல்கள் மக்களுக்குக் கிடைக்கும் மக்களும் இதை எளிதாக அணுகி வாங்க முடியும். என்கிறார் பொம்மிடி சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம்.
– மணிகண்டன்