கீழக்கரை கடல் அட்டை கடத்தல் ஆம்புலன்ஸ் இரட்டையர்கள் கைது !

தோட்டத்தில் மூடை மூடையாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல்

0

கீழக்கரையில் கடல் அட்டைகள் கடத்தல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநர்களான இரட்டையர்கள் கைது ! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சொக்கநாதர் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மூடை மூடையாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தன. அதன் அடிப்படையில் கீழக்கரை உளவுப் பிரிவு எஸ்.ஐ .முத்து செல்வம் கீழக்கரை சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி மற்றும் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியை சோதனையிட்ட போது அந்தத் தோட்டத்தில் 720 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தி இருந்தனர்.

கடல் அட்டைகள் கடத்தல்
கடல் அட்டைகள் கடத்தல்
4 bismi svs

இதனை அடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் வனத்துறையிலிருந்து வந்த அதிகாரிகள் அவர்கள் கடல் அட்டைகளை பதப்படுத்துவதற்கு வைத்திருந்த கேஸ் சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களான நசுருதீன் அசாருதீன் ஆகிய இரட்டையர்களை கைது செய்தனர்.

மேலும் இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு உரப்பவுடர் கடத்த முயன்றனற வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.