அங்குசம் சேனலில் இணைய

கோயில் சுற்றுச்சுவரை உரிய அனுமதியின்றி இடித்த ‘மீன் வியாபாரி’! தஞ்சை அருகே பதற்றம்..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

கோயில் சுற்றுச்சுவரை உரிய அனுமதியின்றி
இடித்த ‘மீன் வியாபாரி’!
தஞ்சை அருகே பதற்றம்..!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் சக்கராப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 250 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு சந்திரசேகர விநாயகர் கோயிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அக்கோயிலின் முன்புறம் மீன்கடை மற்றும் விறகுக்கடை நடத்திவரும் நபர் தனது வியாபார வசதிக்காக எவ்வித முன்அனுமதியும் பெறாமல் இடித்துவிட்டார்.


அவரது சுயநல மற்றும் முட்டாள்தனமான செயலால் அப்பகுதியில் இத்தனை ஆண்டுகாலமாக நிலவிவரும் மத நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
அதற்கு காரணம், கோயில் சுற்றுச்சுவரை இடித்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நூர் முகம்மது என்ற இஸ்லாமியர் என்பதும், அவர் அப்பகுதியிலுள்ள முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !


கோயிலின் சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள இடத்தில் நூர் முகம்மதுவின் குடும்பத்தினர் அவரது தாத்தா காலத்திலிருந்து சுமார் 150 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். நூர் முகம்மது அவ்விடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக மீன் கடை மற்றும் விறகுக்கடை நடத்தி வருகிறார்.

கோயில் சுற்றுச்சுவருக்கு உட்புறம் உள்ள இடத்தையும் அவர் கடந்த சில மாதங்களாக புழங்கி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுமார் 750 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து அங்கே ஒரு ‘ஷெட்’ போட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த ‘ஷெட்’ வெளியே தெரியுமாறு அக் கோயிலின் சுற்றுச்சுவரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சுமார் 20 அடி நீளத்திற்கு இடித்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த போலீஸார்;, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை ‘அலர்ட்’ செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த 3 செயல் அலுவலர்கள் அங்கே சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபற்றிய தகவல் கிடைக்கப்பெற்றதும், அங்கே 3 செயல் அலுவலர்களை விசாரணை நடத்த அனுப்பியுள்ளதாகவும், அவர்களது அறிக்கை கிடைக்கப்பெற்றதும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு தெரிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.