திருச்சியில் திருநங்கைகள் மோதல் ! மாநகர காவல் ஆணையர் அதிரடி !

0

திருச்சியில் திருநங்கைகள் மோதல் ! மாநகர காவல் ஆணையர் அதிரடி !

 

சமூக வலைத்தளங்கள் மிக வைரலாக பரவி வரும் செய்தியாக சமீபத்தில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் இரு திருநங்கைகள் தரப்பினர் அடித்துக்கொண்ட வீடியோ காட்சிகள்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

திருநங்கை மோதல் வீடியோ

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஏற்கனவே திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியர் ஒருவரிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டு அவர் கொடுக்காததால் பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் அடித்த சம்பவ வீடியோ திருச்சியை வேற லெவலுக்கு சமூக வலைத்தளங்களில் கொண்டுபோய் சேர்த்தது. இந்த வீடியோவை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், என சமூக வலைத்தளங்களில் பார்த்த பொதுமக்கள் திருச்சிக்கு சுற்றிப்பார்க்க செல்ல கூடாது என்ற மன நிலைக்கு வந்து விட்டதாக அந்த வீடியோக்கு கீழ் பலர் தனது கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகரில் அடுத்த அடுத்த சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ்.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் பேசியபோது…..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திருச்சி மாநகர் அரியமங்கலம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் யாரும் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை இருந்தாலும் காவல்துறை மூலம் நாங்கள் அந்த பிரச்சனையை விசாரணை செய்து பார்த்ததில் இது முழுவதும் அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனைக்கு உட்பட்டிருந்தது இதனால் அவர்களே முன்வந்து இனி இதுபோன்ற பிரச்சனைகள் ஏதும் நடைபெறாது என்றும் எங்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்றும் இரு தரப்பினரிடையே கூறினார்கள்.

 

எனவே இதுதொடர்பாக திருச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த திருநங்கைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு  அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை போன்றவற்றை கருத்திற்கொண்டு உதவிடவும் சமூக நல துறை மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரத்தை வைத்து கூடிய விரைவில் உதவிட நாங்கள் தயாராக இருக்கின்றோம் மேலும் இதைத் தவிர்த்து திருநங்கைகள் என்று கூறிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது துரித நடவடிக்கையும் மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

 

சமூக நலத்துறை அதிகாரி தமீமுனிஷா

இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி தமீமுனிஷா கூறியபோது..

திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் இதுவரை உள்ள கணக்கெடுப்பின்படி 189 நபர்கள் அரசின் கோட்பாடுகிணங்க அரசின் சலுகைகளை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருநங்கைகள் அதாவது (மூன்றாம் பாலினத்தவர்) என்பதற்கான அடையாள அட்டையினை பெற்றவர்கள் ஆவார்கள். மேலும் இவர்களில் தொழில் தொடங்குவோருக்கு அது தொடர்பான பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு உதவித்தொகையும் கொடுத்து ஊக்குவித்து வருகிறோம். மேலும் கல்வி மேற்படிப்பு போன்ற அனைத்து வகையிலும் அரசு சார்ந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இதில் வீடு இல்லாதோர் மற்றவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் வீடுகளும் வழங்குகின்றோம் ஆனால் இவர்கள் யாரும் அவர்களுடைய முறையான இருப்பிட முகவரியை தெரிவிப்பதில்லை இதனால் அடுத்து அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் அவர்களை தொடர்புகொள்ள நினைத்தால் முடியாமல் போய்விடுகின்றது. இருப்பினும் அவர்களது உடன் உள்ளவர்களிடம் இதன் பற்றி கூறி தெரிவித்து அதனை மற்றவருக்கு வழங்கிடும் நிலைமை வந்தாள் எப்படி நீங்கள் என்னை விட்டுவிட்டு மற்றவருக்கு கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள்.

 

அவர்களுக்கு தேவையான ஆதார் கார்டு மற்றும் திருநங்கை அட்டை போன்றவற்றை மருத்துவ அறிக்கையை கொண்டு உடனுக்குடன் வழங்கி வருகின்றோம். இதுபோன்ற அரசு சார்ந்த திட்டங்கள் பல இருப்பின் இவர்கள் அதனை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்..

 

திருச்சி மாநகரில் திருநங்கைகள் என்று கூறிக் கொள்வோர் உரிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அங்கீகரிக்கபடுவதாக காவல்துறை வட்டாரத்தில்  எடுக்கப்படும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அடுத்து அடாவடியில்  இறங்கி வரும் டுபாக்கூர் திருநங்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதுதான் உண்மை..

 

செய்தி- ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.