நிச்சயம் ஈகை செய்வதால்  வறுமை ஏற்படுவதில்லை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

றுமைக்கும்  ஈகைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதையும் ஏழ்மைக்கும் நேர்மைக்கும் இடையே நேரடி சம்பந்தமுண்டு என்பதையும் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சி .

கிளினிக்கில் கடைசிக்கு முந்தைய நோயாளியாக வாடிக்கையாக வரும் நபர் வந்திருந்தார். மருத்துவமனைக்கு வெளியே தேனீர் விற்று ஜீவனம் நடத்தி வருகிறார்.  காத்திருப்போர் குறைவாக இருக்கும் பொழுது  நோயர்களிடம் சிறிது நேரம் பேசி அவர்களின் வாழ்வியல் குறித்து அறிந்து கொள்வது எனக்கு விருப்பமான செயல்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,
Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,

அவரிடம் பேசும் பொழுது , “அண்ணே … டெய்லி எவ்வளவுக்கு விக்கும்?

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சார்.. டெய்லி ஐநூறு ரூபாய்.. சில நேரம் எழுநூறு.. சில நேரம் நானூறு.. இப்டி விக்கும் சார்..

“காலைல எத்தன மணிக்கு கிளம்புவீங்க?

காலைல மூனற மணிக்கு எந்திரிச்சு … ஆறு மணிக்கு டீ போட்டு ரெடியா.. எடுத்துட்டு போய்டுவோம்..

நாலு டின்.. ஒரு டின்ல காபி.. ஒரு டின் டீ.. ஒரு டின் பால்.. ஒரு டின்ல சுடு தண்ணி.. ”

சுடு தண்ணி எதுக்கு?

“நோயாளிங்க சுடுதண்ணி கேட்டா இலவசமா குடுப்பேன் சார்.. ”

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“அருமைண்ணே…உங்களுக்கு நடக்குற இந்த வியாபாரத்துலயும் உங்களால முடிஞ்சது சுடுதண்ணீர இலவசமா கொடுக்குறீங்க..சிறப்புண்ணே”

“சில நேரங்கள்ளல டீ சரியா விக்காம இருந்தாலும்… இந்த சுடு தண்ணீர் கொடுக்குறத நிறுத்த மாட்டேன். குளிர் காலங்கள்ல மூனு நாலு கேன் சுடுதண்ணீர் கூட தேவைப்படும். எதுக்கும் காசு வாங்க மாட்டேன்..இது என்னோட திருப்திக்காக செய்றேன்.”

“நல்லதுண்ணே. நம்ம செய்ற தொழில்லயே எப்படி தர்மம் செய்யலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன்”

” ஒரு வயசான பாட்டி காதுல தொங்கட்டான் போட்டுக்கிட்டு இருந்துச்சு.. என்கிட்ட வந்து.. பஸ்ஸுக்கு காசில்ல . ஆனந்தூர் போகனும்.. பத்து ரூபா இருந்தா குடுப்புனுச்சு..

நான் சொன்னேன் , “ஆனந்தூருக்கு போக அம்பது ரூபா ஆகும்.. இந்தானு அதுகிட்ட அம்பது ரூபா குடுத்து அனுப்புனேன்.. நீ முடிஞ்சா வந்து குடுனு சொன்னேன் .

அந்த பாட்டி ஆறு மாசம் கழிச்சு வந்து காச குடுத்துருச்சு சார்… ”

மழை நம்மிடையே இன்னும் பொழிவதற்கு காரணம் தேட வேண்டாம். மீண்டும் கூறுகிறேன்.  நாம் செய்யும் அளவு மிஞ்சிய செலவினங்கள் ஆடம்பரங்கள் விரயங்களால் மட்டுமே வறுமை ஏற்படுகின்றது.

நிச்சயம் ஈகை செய்வதால்  வறுமை ஏற்படுவதில்லை . வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து தான் ஈகை செய்வேன் என்று இருப்பதை விடவும்  இருப்பதில் அதிலும் நாம் செய்யும் தொழிலில் ஈகையைப் புகுத்தி விட்டால் அது இன்னும் சிறப்பான காரியமாக இருக்கும்.

நான் எனக்கான பாடங்களை எனது அன்றாட வாழ்க்கையில் இருந்தே கற்கிறேன். நம் வாழ்வைச்சுற்றியும் சிறப்பான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நாம் தான் சிறிது மெனக்கெட வேண்டும்.

மீண்டும் கூறுகிறேன் ஈகையால் வறுமை ஏற்படுவதில்லை !

 

–   Dr.A.B.ஃபரூக் அப்துல்லா.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.