அ.வை. தங்கவேல்  நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு  மற்றும் படத்திறப்பு விழா திருச்சி அருண் ஹோட்டலில் நடைபெற்றது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நிகழ்வில் இளம் தொழிலதிபர் விஜய.பிரபு வரவேற்றார். இந்திய குடியரசு தலைவர் (நிர்மல் கிராம் புரஸ்கார்) விருதாளர், எழுத்தாளர்,கவிஞர் வாழையூர் குணா தலைமை வகித்தார். தமிழ் வழிக் கல்வி இயக்கம் மாநில தலைவர் மூத்த தமிழறிஞர் அ.சி.சின்னப்பத்தமிழர் படத்தை திறந்து வைத்தார். யாவரும் கேளீர் இதழ் ஆசிரியர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், தமுஎகச திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வி. ரங்கராசன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தமிழக ஆளுநர் விருதாளர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலர் தோழர் செல்வமணியன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாவலர் ஆ.இராமர், மக்கள் அதிகாரம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் காவேரி நாடன், மக்கள் பாதை திருச்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.அன்பழகன், திண்ணனூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.தியாகராஜன், பன்னாட்டு தமிழ் உறவு மன்றம் செயற்குழு உறுப்பினர் வா. சீ. லெட்சுமி நாராயணன், சமூக ஆர்வலர் வீ.அன்னலட்சுமி, தமிழ்நாடு இந்திர குல பெண்கள் முன்னேற்ற சங்கம் பொன்சிலம்பு,

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநில செயலர் பாவலர் வை.தேனரசன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொன். தங்கராசன், மண்ணச்சநல்லூர் மு.திவாகர், வயலூர் மா.தங்கமணி, புத்தனாம்பட்டி து.பிரசாத், சு.பாலசுப்பிரமணியன், செ.வீரமலை, சென்னை தனசேகரன், மருதை, இரமேஷ், செல்வராஜ் உட்பட பலர் அ.வை.தங்கவேல் தியாகத்தையும்,  இலட்சியத்தையும் நினைவுரையில் எடுத்துரைத்தனர். நிறைவாக புத்த அற நெறியாளர் தம்மச்செல்வன் நன்றியுரையாற்றினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.